என்னைப் பற்றி

திங்கள், அக்டோபர் 24, 2022

 

 இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்

 கற்பிப்பவன் ஆசிரியன் அல்ல கற்றுக்கொடுப்பவனே நல்ல ஆசிரியன்.வாழ்வை அளிப்பவன் ஆசிரியன். வாழ்வை அழிப்பவன் அல்ல.

ஆசிரியத்துவம் என்பது மகத்துவமானது.தன்னலமற்றது.தன்னிடம் கற்றவர்கள் தன்னை விட எப்போதும் உயர்வாக இருக்கவேண்டும்.சமூகத்தில் தம்மை விட மேலோங்கி வரவேண்டும் நினைக்கின்ற ஆத்மாக்கள் ஆசிரியர்கள்.

இவர்களது அர்ப்பணிப்பான இயங்குதல் இல்லையெனில் சமூகம் உயிர்ப்பு பெறுவது எங்கனம்.

தன்னிடம் கற்றவன்சித்திபெறுகின்றபோது காட்டுகின்ற மகிழ்ச்சியும் அவன் தோற்றுப்போகின்ற போது படுகின்ற துயரினையும் வார்த்தைகளினால் வடித்துவிடமுடியாதவை.


இதயக்கூட்டிற் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்குள் இருந்து உயிர் பிரிகின்ற கனங்கள் வரை அவர்களது நினைவுகள் உயிர் வாழ்ந்துகொண்டிக்கும்.

அவர்கள் எப்போதும் இதயக்கோவில்களில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள்.அவர்கள் இட்ட வழிச்சுவடுகளினை பின்பற்றியே எமது பாதைகள் தகவமைக்கப்பட்டன.

நாம் எமக்கான பாதையில் பயணித்தாலும் நாம் துவண்டு போனபோது அவர்கள் எமக்களித்த வார்த்தைகள் ஒதுங்கியிருந்தபோது முன்னுக்கு கொண்டுவருவதற்காக பொய் கலந்து சொன்ன  உண்மைகள் எமக்குள்ளே விசை கொண்டு எமது வாழ்வியல் பயணத்தினை உந்தித்தள்ளிக்கொண்டிருக்கின்றது.

நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் எல்லாம் உங்களால் சாத்தியமானவை.நாம் அடைந்து கொண்ட தோல்விகள் எல்லாம் எமது அசன்டையீனங்களாய் வந்துதித்தவை .

நினைவுச்சொடுக்கினுள் வந்து செல்கின்ற ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கின்றபோது அத்தகைய நாட்கள் மீண்டும் வராதா என்கின்ற ஏக்கப்பெருமூச்சு இதயத்தி்னுள் இருந்து வலி மிகுந்து வெளித்தள்ளுகின்றது.

அவை வசந்த காலங்கள்.கனவுகளை உற்பத்தியாக்கிவிட்ட காலங்கள்.

தன்னம்பிக்கையுடன் நாமும் இந்த பூமிப்பந்தில் பயணிக்க முடியும் எனும் உத்வேகத்தை அளித்தபொழுதுகள்.

நீங்கள் இல்லையேல் நாம் இல்லை.எங்களது பலவீனங்களை கூட பலமாக்கி விட்ட பவித்திரமானவர்கள்.

நீங்கள் செய்த சேவைக்கு உதவிக்கு பிரதியுபகாரமாக நாம்  என்ன செய்துவிட்டோம் .

ஆனாலும் உங்கள் பெயர்களை  எம்மோடு அடுத்த தலைமுறை நோக்கி கொண்டு செல்கி்ன்றோம்.

இதுவே நாம் உமக்கு செய்கின்ற  உதவி.

நான் எப்போதோதொலைந்து விடுவேன் அல்லது அழிந்து விடுவேன் அல்லது அழித்துவிடலாம் என்றவர்களது செயல்ப்புல வெளிக்குள்ளும் மூச்சு முட்டி வலி நிறைந்த பயணங்களை மேற்கொள்கின்ற போதெல்லாம் நீங்கள் அருகில் இருந்து என்னை வழிநடத்துவதாய் என் ஆன்மா சொல்லிக்கொள்கின்றது.

இவ்வாறு எனது கூட்டிற்குள் பசுமையாக இருக்கின்ற எனது ஆசிரியர்களது நினைவுகளை மீட்டிப்பார்க்க முயல்கின்றேன்.

(மீட்டல்கள் தொடரும்...)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக