என்னைப் பற்றி

ஞாயிறு, அக்டோபர் 23, 2022

 (எஸ்.ரி.அருள்குமரன்)

காலம் சிலவற்றை அரங்கேற்றிவிடுகின்றது.கனவு சில விடங்களை துடைத்தெறிகின்றது.

கற்றுத்தந்தவர்களிடம் இருந்து எம்மையறியாமலே கற்றுக்கொண்ட விடயங்கள் எம்மை வழி நடத்துகின்றன.

ஆசான் என்பவன் அறியாமை நீக்குபவர் என்கின்றார்கள். எம்மை அறிவுத்தேடலிற்கு வழிவகையினை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
நாம்பயணப்படவேண்டிய வழி எதுவென தெரியாது சிலவேளைகளில்தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் எம்கரம் பற்றி நகர்த்திச்செல்பவர்கள்இவர்கள்.



நாம் கற்ற துறையிலேயே பயணிக்கின்றபோது ஏற்படுகின்றமன மகிழ்ச்சி வார்த்தைகளிற்கு அப்பாற் பட்டவை.

அரங்கு சார்ந்த கற்றல் அறிமுகமாகியது கந்தவேள் சேரிடம் இருந்தே.

அவர் வகுப்பறைக்குள்ளேயும் வெளியேயும் கற்றுனர்த்திய விடயங்கள் இன்றையஇயங்கியலுக்கான ஆதார்சமான புள்ளிகள்.ஆழப்பாயும் வேர்கள்.விதைதத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
யூனியன்கல்லூhயில் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தினை கற்ற வேளையிலே அவருடைய அறிமுகமும் அதன் தொடர்ச்சியாக பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்னர் 1998 ம் ஆண்டு யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் 'காணல் வரி நாடகம் இவரது நெறியாழ்கையில் மேடையிடப்பட்டபோது பார்வையிட்டுள்ளேன்.

மாதவியின் கதையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நாடகக்காட்சிகள் மனக்கண்முன் இன்றும் நிற்கின்றது.

நாடகம் பார்ப்பதில் விருப்பமான எம்மைபோன்றவர்களுக்கு நாடகம் ரசனைக்குரியதாக இருந்ததுடன்பரலது வரவேற்பினை பெற்றுக்கொண்டது.
அந்நாடகத்தின் காட்சி இன்றும் மனக்கண் முன் விரிகின்றது முரசறைசபவனது செய்தியோடு நாடகம் ஆரம்பமாகும்.நிசாந்தராகினி அக்கா (இன்று அவர் தேசிய கல்வி நிறுவகத்தின் நடனத்துறை விரிவுரையாளராக இருக்கின்றார். கலாநிதி பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.) மாதவிக்கு நடித்திருந்தார் அவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.

சேரிடம் போய் நல்ல நாடகம் என குறிப்பிடவதற்கான துணிவு இருந்ததில்லை. பின்னர் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை கற்றவேளை அவருடன் பழகமுடிந்ததுடன் அவரது ஆளுமைகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும் அவரிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

உயர்தரத்தில் கற்ற காலத்தில் அவர் சிறியளவிலான களப்பயிற்சி பட்டறைகள் நடத்தியதுண்டு அத்தகைய களப்பயிற்சிபட்டறையில் பங்குபற்றிய அனுபவம் மறக்கமுடியாதது.

மருதனார் மடம் இராம நாதன் கல்லூரி வளாகத்தில் யூனியன்கல்லூரி இயங்கிய வேளை அப்போதைய கல்லூரி அதிபராக இருந்த புண்ணியசீலன் சேரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர்களப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆர்வத்துடன் அப்பயிற்சிபட்டறையில் நானும் பங்கபற்றியிருந்தேன்அப்பயிற்சிபட்டறையில்.சுன்னாகம் ஸ்கந்தவரேதயாக்கல்லூரி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அப்பயிற்சிப்பட்டறையில் தான்;

மஹாகவி உருத்திரமூர்த்தியில் கவிதையான 'மப்பன்றி காணமழை காணாத மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியா விளையாது.... எனும் கவிதை எனக்கு அறிமுகமானது.

அவர் அக்கவிதையை சொல்லித்தந்த முறை இப்போதும் நெஞ்சக்கூட்டில் நிழலாடுகின்றது.

சப்பாத்தி முள்ளும் என்பதை அழுத்தி பேசி காட்டுவார்.
வாசிக்கின்றபோது எவ்வாறு வாசிக்கவேண்டும் , உணர்வு வேறுபாடு எவ்வாறு வரவேண்டும் என்பதெல்லாம் அங்கு அவரிடம் கற்றுக்கொண்டோம்..
பங்குபற்றியவர் நடிப்பு செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர்.எல்லோரும் ஒவ்வொருவராக நடிக்கின்றனர்.என்னுடைய ரேன் வருகின்றது.நான் எழும்பி யாரையும் பாக்காமல் நடிச்சு முடிச்சிட்டு என்னுடைய இடத்தில போய் இருந்திட்டன்.கைதட்டல் சத்தம் கேட்கிது.சேரும் நல்லா இருந்ததாக பராட்டினார்.மிகச்சிறப்பாக நடிச்சனோ எனக்கு தெரியாது.ஆனால் அந்த பாராட்டு மிகப்பெறுமதியானதாக இருந்தது.நான் நடிச்சது குடிகாரன் பாத்திரம்.இது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

தென்னவன் பிரமராயன் எனும் நாடகம் மேடையிடப்படவுள்ளது விரும்பியவர்கள் பங்குபற்றலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்நாடகம் மாணிக்கவாசகர் சுவாமிகளது வாழ்வியலை பேசியது.குதிரை வாங்க மன்னன் காசு கொடுத்து அனுப்பிவிடுவார். அவர் அதைஇறை பணிக்காக செலவழித்துவிட்டு மன்னன் கேட்ட பரிகளை வாங்க முடியாது இருந்த வேளை சிவன் நரிகளை பரிகளாக்கிஅனுப்பி வைப்பார் .பரிகளான நரிகள் மீளவும் பரிகளாக மாறியதினால் கோபமடைந்த மன்னன் மாணிக்கவாசகரைதண்டிக்கும் நோக்கில் நெற்றியில் கல் வைச்சு நதிக்ரையில் நிறுத்திவிடுகின்றார் இவ்வேளைவைகை நதிபெருக்கெடுத்தோடும் போது அணைகட்டுவதற்கு மக்களுக்கு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்படுகின்றது.

செம்மனச்செல்வி எனும் கிழவிக்கு அணை கட்ட ஆட்கள் இல்லாது போது சிவபெருமான் கூலியாளாக வருவதும்,வேலை செய்யாது இருப்பதும் ,அரசன் கூலியாளது முதுகில் பிரம்பினால் அடிப்பதும் அந்தபிரம்படி எல்லோரது முதுகிலும் படுவதுமே நாடகத்தின் கதை.

சொக்கனால் எழுதப்பட்டஇந்நாடகத்தை இவர்நெறியாழ்கை செய்திருந்தார். நானும் அதில் சிறிய பாத்திரம் ஏற்று நடித்திருந்தேன்.
அவரது நெறியாழ்கை அனுகுமுறை வித்தியாசம்.
எங்களை செய்யவிடுவார்.எப்படி வர வேண்டும் என்பதை சொல்லி தருவார்.நடிச்சும் காட்டுவார்.

நாடகத்திற்கு மிக குறுகிய காலம்.சிலவேளை பேச்சும் விழும்,அடியும் விழும் ஆனால் நாடகம்நல்லா வரவேணும் என்பதற்கான உiழைப்பு இருக்கும்.மிக நுனுக்கமாக விடயங்களை கையாழ்வார்.

நான் மேடையேறி நடித்தபோது கிடைத்த பாராட்டுக்கள் தொடர்ந்து நடிகனாக செயற்படுவதற்கான ஊக்கியாக இருந்ததது.
மதிப்பிற்குரிய இளையதம்பி ஆசிரியர் அவர்கள் வகுப்பறைக்கு வருகை தந்தபோது அருள்குமரன் மிக நல்லா நடிச்சிருந்தீர்.தொடந்தும் நடிக்க வேனும் சந்தோசமாக இருந்தது.என்றார்.இது எனக்கு
கிடைச்ச விருதாகவே நினைக்கின்றேன்.இதற்கு காரணம் நெறியாளர் கந்தவேள்சேர்.

உயர்தரத்தில் கற்றவேளை அவரது தனியார் கல்வி நிலையத்திலும் கற்றலுக்காக சென்றிருந்தேன்.பல்கலைக்கழக அனுமதிகிடைத்தபோது அச்செய்தியினை சொல்வதற்காக அவரது இணுவில் இல்லத்திற்கு காலை, மாலைவேளை சென்றிருந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.
அன்றைய காலத்தில் அலைபேசிகள் இன்மையால் இத்தகைய இடர்பாடு.மறுநாள் மாலை சென்றவேளை அவர் வீட்டில் ஓய்வாக இருந்தார்.வழமைபோல் வாரும் இரும் என்றார்.

நான் சேர் எனக்கு நாடக பாடம் படிக்க யூனிவர் சிற்றி கிடைத்திருக்கு. என்றேன்.

அதற்கு அவர் சந்தோசம் ஆனால் இனி என்னை சந்திக்க வரப்படாது என்றார்.
நான் அதற்கு என்ன ஏது என்பதுபோல யோசிக்கின்றேன்.

அவர் வழமையான சிரிப்புடன் நீர் என்னட்ட அடிக்கடிவர வாய்ப்பிருக்கு. சேர் ரீயுட் எழுத புத்தகம் வேனும், அது வேனும்இது வேனும் எண்டு வருவீர் .அப்பிடிவந்தால் நீர் வளரஏலாது. நீர் புத்தகங்கள் வாங்கி சேகரிக்க வேனும் நிறைய தேடவேனும் என்டு சொல்லி தன்னிடம் எவ்வளவு புத்தகம் இருக்கிறது என்பதை சொன்னார்.

அவர் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை எனது பிற்பட்ட காலங்களில்அறிந்து கொண்டேன்.அவர்சொன்ன விடயங்களில் இன்று எனது தனிப்பட்ட சேகரத்தில் பலநூல்கள் உள்ளது.

பல்கலைக்கழகத்தில் கற்ற வேளையில் செவ்விளக்கு நாடகத்தில் ஆற்றுகையாளனாகசெயற்பட்டபோது நாடகத்தை பார்வையிட்டபோது எதுவும் என்னிடம்சொல்ல வில்லை.

ஆனால் அருள் நல்லாவருவன் எண்டு தெரியும் நான் எதிர் பார்த்ததை விட மேல போயிட்டான் சந்தோசமாக இருக்கின்றது என பலருக்கும் குறிப்பிட்டு பெருமைப்பட்டவர்.இத்தகைய வளர்ச்சிக்கு இது நீங்கள் போட்ட அடிப்டை சேர்.

உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆர்கலோ சதுரர் நாடகம் தயாரிக்கப்பட்ட காலம்.அத்தயாரிப்பு நடன நாடக ஆற்றுகை எனும் வகையில் நடன கலைஞர்களது அளிக்கை உணர்வுப்பின்புலத்தில் பாத்திரங்களிற்கான உரையாடல் பின்னனியாக கொடுக்கப்பட்டது. அவ்வாற்றுகையில் குரல் வழங்குனராக செல்வதையும், அவ் அனுபவத்தையும் வகுப்பில் குறிப்பிடுவார்.
நாடகத்தில் பெரிய நடிகானாகவோ அல்லது நாடகத்தில்பெரியாக்களோ வராட்டிலும் பராவாயில்லை நாடகங்களை ரசிக்ககூடியவர்களாக வந்தாலே பெரிய விஷயம் என இவர் அடிக்கடி கூறுவதுண்டு.

அவரது தெஸ்பியஸ் கல்விநிறுவனத்தில் கல்வி பயில சென்ற காலத்தில் ஒரு நாள் வீட்டிற்கு வரச்சொன்னார். அங்கு தான் தயாரித்த ரியூட்டுக்கள்எல்லாவற்றையும் தந்து இதை படிச்சாலே கானும் என்டவர்.
நாங்கள் காசுக்குதான் படிப்பிச்சநாங்கள் அனால் நீங்கள் விசுவாசத்தோட இருக்கிறியள் சந்தோசம் என்பார்.
 
எங்கும் எப்போதும் அறிவுரையுடன் வழிகாட்டுகின்ற அரங்க துறை சார்ந்தவர்.
ஏறிச்சென்ற ஏனியை எட்டி உதைந்தால். ஏறிய இடத்திலேயே நிற்க வேண்டும். இது வரலாறு சொல்லும் செய்தி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக