என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 06, 2010

பள்ளிக்கூடம் திரைப்படம் ஒரு நோக்கு

மனிதன் காலம் தோறும் தனது அறிவு செலுமையினால் பல தொழில் நுட்ப சதனங்களினை வழங்கிக்கொன்டிருக்கின்றான். அத் தொழில் நுட்ப்ப சாதனங்கள் கலை நடவடிக்கை களுக்கு அடிப்படை ஆகின்றன.
தொழில் நுட்ப்ப சாதனங்களின் அடிப்படை உற்பத்தியாக விளங்கும் திரைப்படம் இன்று மனிதனை தனது ஆளுகைக்குள் கையகப்படுத்தியுள்ளது.
இத் திரைப்படங்களின் ஒரு பிரிவாக குறுந் திரைப்படங்கள் விளங்குகின்றன. இக் குறுந் திரைப்படங்கள் ஈழத்திலும் வளர்ந்து வரும் துறையாக விளங்குகின்றன.இதற்கான உற்பத்திவெளிகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ,கல்வியர்கல்லூரிகள் .......... ,என்பன விளங்குகின்றன.
இவ்வகையில் கந்தையா ஸ்ரீ கந்தவேள் அவர்களின் நெறியாள்கையில் வெளி வந்த "பள்ளிக்கூடம்" எனும் திரைப்படம் பற்றிய அனுபவப்பகிர்வாக இது அமைகின்றது.
தந்தை ,தாய்,மகள் என்பதாக ஓர் ஏழைக்குடும்பம். இக் குடும்பத்தில் மகள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைகின்றாள். பெற்றோர் தமது மகளை நகர பாடசாலையில் கல்வி கற்பிக்க விரும்பு கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கீடு குறுக்கீடாக அமைகின்றது . பெற்றோர் தமது நிலையினை அதிபருக்கு தெரிவித்து குறைந்த நிதியுடன் பாடசாலையில் மகளை இனத்துக்கொள்கின்றனர். ஆயினும் நிறைய கனவுகளுடன் பாடசாலையினுள் நுழையும் மாணவிக்கு வகுப்பறையில் இடம் பெறும் சம்பவங்கள் அதிர்ச்சியானதாகவும் ,மன விரக்த்தியானதகவும் அமைகின்றது. இதனால் மனவிரக்தியடைந்து பாடசாலைக்கு போகமறுக்கின்றாள்.அவளுக்கு நினைவுகள் வலி தருவனவாகவும் விளங்குகின்றன.எனவே அவளுக்கு உளநிவர்த்தி அளிப்பதவும் அதன் பின்பு அவள் வைத்தியராக வருவதாகவும் இக் குறுந்திரைப்படம் அமைகின்றது.
கதையானது உளவியல் அணுகுமுறையுடன் அமைக்கப்பட்டுள்ளமையானது சிறப்பானதாகும்.ஆயினும் கதை வளர்க்கப்பட்ட முறையும் முடிவும் சில குறை பாடுடையதாக விளங்குகின்றது. ஆயினும் உளவியல் ரீதியான அணுகுமுறையில் கதை அமைத்தமை புதிய முயற்சியாக காணப்படுகின்றது.
சினிமா என்பது எப்போதும் கமெராவினால் உருப்பெருவதாகும் .எனவே கமெர கோணங்களிலேயே சினிமாவின் உயிர் காணப்படுகின்றது. இத் திரைப்படத்தில் கமெராவினால் கதை சொல்லும் உத்தி குறைவானதாகவே காணப்பட்டது. மேலும் ஒளியூட்டல் கட்சிகளுக்கனா நீட்டிப்பு தொடர்ச்சி என்பவற்றில் கவனக் செலுத்த வேண்டும் .
ஆயினும் புதிய துறை எனும் வகையில் இவை குறை பாடுகள் என்பதில் இருந்து புதிய படைப்பிற்கான ஓர் அடித்தளமாக கொள்ளமுடியும். எனவே இப்படைபளியின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
S .Tஅருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக