மருத்துவபீட நாடக விழா ஆற்றுகைகள்
நாடகம் சமூகத்தில் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளினை விமர்சனரீதியில் வெளிப்படுத்துகின்ற வடிவமாக காணப்படுகின்றது.இந்தவகையில் எப்பிரச்சினகளிளை வெளிப்படுத்தவேண்டும் என்பதில் படைப்பாளிகள் கூடிய கருசனையினை காட்டுகின்றனர்.

அரங்கு பார்ப்போருடன் நேரடி தொடர்பினை கொண்டுள்ள வடிவம் எனும் வகையில் உயிர்ப்பான கலைவடிவமாக இன்றும் விளங்குகுவதுடன் சமூகத்தில் தேவையான வடிவமாகவும் காணப்படுகின்றது.
இப்பின்னனியில் நாடகம் சார்ந்த செயற்பாடுகளிற்க்கான களவெளிகளாக பல்வேறு விழாக்களாக விளங்குகின்றன.
யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினர் அரங்கதுறைவளர்ச்சிக்காக காத்திரமான வகையில் அரங்க அளிக்கைகளினை வருடம் தோறும் நிகழ்த்தி வருகின்றனர். இவ்வகையில் மருத்துவபீட மாணவர்களின் நாடக விழா கடந்த வாரம் மருத்துவ பீடத்தின் கூவர் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வி;ல் பிரதம விருந்தினராக குடும்பம் மற்றும் சுகாதார மருத்துவர் வைத்தியகலாநிதி ஆர்.சுரேந்திரகுமார்பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
நாடக விழாவில் 38வது அணி மாணவர்களின் அளிக்கையாக போதை, 36வது அணி மாணவர்களின் அளிக்கையாக வருகினம், 37வது அணி மாணவர்களின் அளிக்கையாக எனக்கென்ன, 35வது அணி மாணவர்களின் அளிக்கையாக மீண்டவர் ஆகிய நாடகங்கள் மேடையிடப்பட்டன.

நாடகபடைப்பு பார்ப்போரிடையே கனதியான தாக்கத்தினை ஏற்ப்படுத்துகின்றவையாக அமைந்;தன. உணர்வியல்ரீதியான வகையில் ஒன்றிப்பதற்கான சுழமைவுகள் காட்சிப்;பின்னனிகள் ரீதியாக உருவாக்கப்பட்டன.
இப்பின்னனியில் நான்கு நாடகங்களும் பார்ப்போரிடையே ரசனையினை ஏற்ப்படுத்தியிருந்தன.

முதலாவது ஆற்றுகையாக நிகழ்;த்தப்பட்ட 38 வது அணி மாணவர்களின் போதை எனும் ஆற்றுகையானது சமூகத்தில் இன்று பேசப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினையான போதைப்பிரச்சினையினை கருப்பொருளாக கொண்டு வெளிப்படுத்தப்பட்டன. கற்றலினை விடுத்து நன்பர்களின் தவறான வழிநடத்தலினால் போதையின் பாதகை;குசென்று செய்யக்கூடாக பல செயல்களினை செய்து இறுதியில் சிறைச்சாலைக்கு செல்வதாக,சமூகத்தினை விழிப்பூட்டுவதாகவும் அமைகின்றது.

36 வது அணி மாணவர்களில் தயாரிப்பில் வெளிப்படுத்தப்ட்ட வருகினம் எனும் ஆற்றுகையானது யதார்த்தத்தின் ஊடு வெளியினை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுவதாகவும் விமர்சனரீதியாகவும் இப்பிரச்சினையினை தீர்க்காதுவிட்டால் எதிர்கால சந்ததியினர் ஊனமுற்ற தலைமுறையினராக மாறிவிடுவர் என்பதினை வெளிப்படுத்துவதாக காட்சிகள் வெளிப்படுத்தப்ட்டன.
நகைச்சுவைக்கூடாக பேசவேண்டிய பிரச்சினையினை வெளிப்படுத்தியது.
கல்விப்பிரச்சினை அடிநாதமாககொண்டு பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டன. கல்விக்காக உள்ள பாடத்தெரிவு, வேலையில்லாப்பிரச்சினை, பாலியல்பிறழ்வு,அடிதடிகலாசாரம்,போதை போன்ற பல்வேறுபிரச்சினைகள் பேசப்பட்டன.
கல்வியின் சிதைவு,பண்பாட்டு சிதைவு குறியீட்டின் உடாக வெளிப்படுத்தப்பட்டது. ஒருசமூகத்தினை அழிவிற்கு உட்படுத்த வேண்டுமாயின் கல்வியின் தாக்கத்தினை ஏற்ப்படுத்துவதன் ஊடாகவே சாத்தியமாகும். என்பதினை வெளிப்படுத்தப்படுத்தியது.
'அந்தராட்சியத்தில் மாற்றம் வரவேனும்..., அந்தராட்சியத்தில் மாற்றம் வந்தாலும் எங்கடசமூகத்தில மாற்றம் வரவேனும்,...,தீயசக்திகளிற்குவிழிப்பாக இருக்கவேண்டும் ஒருவரையும் முழுமையாக நம்பவேண்டாம்' என்கின்ற உரையாடல்கள் சிந்திக்கப்டவேண்டியவை.
பார்போரின்சிந்தனையை தூண்டியபடைப்பாக இது காணப்பட்டது. சொல்ல விளைந்தசெய்தியினை மிகவும் நோர்த்தியான வகையில் குறித்த நேரத்தினுள் வெளிப்படுத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும்.
37வது அணியினரின் 'எனக்கென்ன' எனும் ஆற்றுகையானது மனித சமுதாயத்தில் தலைவிரித்தாடுகின்ற சுயநலத்தினை வெளிப்டுத்துவதாக அமைந்திருந்தது.
ஒரேகாட்சியின் ஊடாக முன்பு உதவிசெய்த சமூகத்தினையும் இப்போது மற்றவர்களிற்குபிரச்சினை வருகின்ற போது எமக்கென்ன என்ற மனிலையில் உதவிசெய்வதை விட ஒதுங்கிசெல்கின்ற மனப்பக்குவம் உடைய மனிதர்களாக மாறிவிடடோம் என்பதினை புலப்படுத்துவதாக காட்சிஅமைகின்றது.'எல்லாரும் தன் நல்ல இருந்தா கானும் என்டு நினைக்கினம் என்கின்ற உரையாடல்சிந்திக்கப்படவேண்டியது.
35வது அணி மாணவர்களது 'மீண்டெழுவர்'; ஆற்றுகையானது எமது சமூகத்தில் நடத்தேறிய அவலங்களினை மீள் நினைவிற்குகொண்டு வருவதாக அமைந்திருந்தது. நல்லாட்சி, அரசியல்வாதிகள், புலம்பெயர் தமிழர்கள் என பலரையும் கிண்டலடிப்பதாக காணப்படுகின்றது.
காட்சிப்படிமங்களின் ஊடாகவும், பாடல் ,ஆடலின் ஊடாக படைப்பு நகர்த்ப்பட்டமை சிறப்பிற்குரியவியடமாகும். ஒளியூட்டல் நாடகத்துடன் இணைந்திருந்தததுடன் இசை,பாடல்கள் சிறப்பான வகையில் நாடகத்துடன் இணைத்துசெல்லப்பட்டன.
மேடையிடப்பட்ட நான்கு நாடங்களும் சமூகத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தன.
அரங்கு பார்ப்போருடன் ஒன்றி அவர்களை விமர்சன ரீதியான சிந்தனையினை எற்ப்படுத்துவதில் முனைப்புக்காட்டுகின்றன.இப்பின்னனியில் இவ்வாற்றுகைகளும் விமர்சனரீதியானவையாக அமைந்திருந்தமை சிறப்பிற்குரிய விடயமாகும்
நன்றி யாழ்.தினக்குரல்