என்னைப் பற்றி

திங்கள், மே 09, 2016

  தேசியத்தில் வெற்'றி


நேர்காணல்-(எஸ்.ரி.அருள்)

களமும் தளமுமே கலைஞர்கள் உருவாக்கத்திற்கான அடிப்படைபளாகின்றன. இன்று தேசியமட்டத்தில் சாதனைகள் படைப்பதற்கான வாயப்புக்கள் பல தளங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் அவ்வாய்ப்புக்களிளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்பவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
கலைத்துறை சார் செயற்பபாடுகளினை வளர்க்கும் வகையில் பிரதேச செயலகங்களில் கலாசார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களிற்கான வகுப்புக்கள் நடத்தப்பட்டு தேசியரீதியில் போட்டிகளினை பங்குபற்ற வைப்பதற்கான சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரனமாக தேசிய வெற்றிகளினை சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்தவகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தரம் 7ல் கல்வி பயிலும் கணேசலிங்கம் -தனுஜன் கர்நாடக  இசைப் போட்டிகளில் தேசியமட்டத்தில் பல வெற்றிகளிளை பெற்று வருகின்றார்.
இவர்  தனது வெற்றி தொடர்பாகவும் தனது செயற்ப்பாட்டு அநுபவங்கள் தொடர்பாகவும் கருத்துபகிர்ந்து கொண்டபோதே மேற்க்கண்டவாறு தெரிவித்தர்.
கேள்வி- உங்களை பற்றிய அறிமுகம்?
பதில்- நான் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தரம் 7ல் கல்வி பயில்கின்றேன். எனது தாயார் பெயர் ஜெகதீஸ்வரி-கணேசலிங்கம்  கட்டுடையில் வசிக்கும் நான் சிறுவயதில் இருந்தே சங்கீதத்தில் ஈடுபாடுகாட்டி வருகின்றேன்.
எனது இத்துறைமீதான ஈடுபாட்டிற்கு காரணம் கட்டுடை சைவவித்தியசாலையில் கல்வி பயின்ற காலத்தில் எனது ஆசிரியர்களும் இ எனது பெற்றோர்களுமே காரணம்.
கேள்வி- பங்குபற்றிய போட்டி தொடர்பாகவும் பெற்ற வெற்றிகள் தொடர்பாகவும் குறிப்பிடுங்கள்?
பதில்-  2015ம் ஆண்டு நான் தரம் 6ல் கல்வி பயின்ற காலப்பகுதியில் கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் தேசியரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் சார்பாக பங்குபற்றி தேசியரீதியில் கர்நாடக இசைப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டேன்.
களனி பல்கலைக்கழகம் தேசிய ரீதியில்  பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கர்நாடக இசை மற்றும் நாட்டார்பாடல் போட்டியில் முதலாம் இடத்தினைஇ பெற்றுக்கொண்டேன். மேலும் பிறிதொரு போட்டியான அம்மாபற்றிய போட்டியில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டேன்.
கேள்வி-இத்துறையில் ஈடுபடுவதற்கு உதவியவர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
பதில்-குளேந்திரன் ஆசிரியர்இ.சிவப்பிரியாஇதமிழினி ஆசிரியர்கள்.
கேள்வி-எதிர்கால இலட்சியம்?
பதில்- வைத்தியராக வரவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக