என்னைப் பற்றி

சனி, ஆகஸ்ட் 23, 2014


(எஸ்.ரி.அருள்குமரன்)

              


நாடகவிழா

 நாடகம் மக்களது வாழ்வில் உள்ள பிரச்சினைகளினை வெளிப்படுத்துவதுடன் பங்குபற்றுபவர்களிடையெ தள மாற்றத்தினை எற்ப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அரங்கிலே ஆற்றுகையாளர்களாக செயற்ப்படுகின்றபோது தாம் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளினை இனம் கண்டு அப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுவதுடன் அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாகவும் விளங்குகின்றது.

இன்றும் அரங்கின் தேவை சமூகத்தில் உணரப்படவதற்கு அதன் தாக்கவன்மையான செயற்ப்பாடு இன்றியமையாதாகும்
 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.

அரங்காடலின் மூலம் மாணவர்களிடையே தொடர்பாடும் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, எல்லோரையும் சமமாக ஏற்றுக்கொள்கின்ற மனநிலை குரூரம்அற்ற தன்மை,பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற உணர்வு போன்ற பல விடயங்கள் இயல்பாகவே ஏற்ப்படுத்தப்படுகின்றன.

 நாடக செயற்ப்பாட்டிற்கான தளங்கள் விரிந்து காணப்படுகின்ற சூழ்நிலையில்  பாடசாலைகள் களவெளிகளினை  ஏற்ப்படுத்துகின்றன.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற விழாக்கள் அவற்றிக்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.
நாடகவிழாக்கள் மாணவர்களது பங்குபற்றலுக்கான களவெளிகளினை ஏற்ப்படுத்தி அவர்கள் சுய சிந்தனையள்ளவர்களாக புதியன படைப்பவர்களாக உருவாக்கும் நோக்கில் அவ்களிற்கான மனத்தடைகள் அகற்றப்பட்டு எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்டவேண்டும் மேலும் அவர்கள் சுய படைப்பினை ஏற்ப்படுத்துவதற்கான கள வெளிகள் ஏற்ப்படுத்தப்டவேண்டும்.
  இப்பின்னயில் பாடசாலைகள் இல்லங்களிற்கு இடையே விளையாட்டு போட்டிகள் நிகழ்த்ப்படுவது போன்று நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டன.
 ஆயினும் காலப்போக்கில் அத்தகைய வழக்கொழிந்து போன சூழ்நிலையில் மானிப்பாய் இந்துக்கல்லூரியானது அறாத்தொடர்ச்சியுடன் இன்று வரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இக்கல்லூரிக்கு நீண்ட வரலாறு உண்டு.
கடந்த 3 ஆண்டுகளாக ஜீலை 3ம் திகதி இரவுப்பொழுதுகளில் நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

   மாணிக்கர் சம்பந்தர், சுந்தரார், வாகீசர் ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே   போட்டிகள் நிகழ்த்படுகின்றன.
 இம்முறை அணைத்து இல்லங்களிற்கும் வசன நாடகங்கள் எனும் வகுதிக்கள் வருகின்ற அரச நாடகங்கள் நாடகங்கள் அதிபரின் எண்ணத்தின் அடிப்படையில் வல்லிபுரம் -ஏழுமலைப்பிள்ளையின் எழுத்துருவாக்கத்தில் படைக்கப்பட்ட நாடகங்கள் போட்டிக்கு கையளிக்கப்பட்டன.
 மாணிக்கர் இல்லத்திற்கு சங்கிலியன், சம்பந்தர் இல்லத்திற்கு மகுடபங்கம்,சுந்தரர் இல்லத்திற்கு அரிச்சந்திரன் கதை, வாகீசர் இல்லத்திற்கு கர்னன் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன
.
இந்நாடக போட்டிகளில்; சங்கிலியன் நாடகம் எஸ்.ரி.குமரன், அரிச்சந்திரன் க.மணிவண்ணன்,மோகனதீபன் மகுடபங்கம் க.சந்திரகுமார், எஸ்.கே.விஜயபால கர்ணண் திருமதி தர்சிகா –ஜெயதீபன் ஆகியோர்  நெறியாழ்கையினை மேற்கொண்டிருந்தனர்.  நாடக போட்டிகளிற்க்கான  இணைப்பாளராக கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் த.அருள்குமரன் செயற்ப்பட்டார்
.
 இந் நான்கு நாடகங்களிலும் நூற்றிக்கு மேற்ப்ட்ட மாணவர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு விழாக்குழவினரால் எற்ப்படுத்தப்ட்டது சான்றாக ஆற்றுகையாளர்களிற்கான எண்ணிக்கை வரையறுக்கப்படாமை இதற்கான சூழ்நிலையினை ஏற்ப்படுத்தியது.
 இங்கு வெற்றி தோல்விகள் மாணவர்களிற்கு முக்கியமாக இல்லாதபோதிலும் ஆத்மிகமானதாகவும் மற்ற்றவர்கள் மீது குரூரமான  மனப்பான்மையினை வளர்க்காத வகையில் ஆற்றுகையாளர்கள் புடம் போட வேண்டியது அவசியமாகும்.

நாடகப்படைப்புக்கள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது என கருத்தாடல்கள் முன்வைக்கின்ற பொழுதுகளில் இத்தகைய விழாக்களின் மூலம் நாடக செயற்ப்பாட்டிற்கான உயிப்பினை  வெளிக்கொண்டு வருதல் வரவேற்க்கத்தக்க விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக