என்னைப் பற்றி

சனி, ஆகஸ்ட் 23, 2014


 (எஸ்.ரி.அருள்குமரன்)

  வாழ்வியலில் முதன்மையான சடங்கு


சடங்கு மக்களது வாழ்வியலில் முதன்மையான அமிசமாக விளங்குகின்றது. ஆதிகால மனிதன் தொட்டு நாகரிகம் அடைந்த மனிதன் வரை சடங்கியல் சார் செயற்ப்பாடுகள் காத்திரமானவையாக விளங்குகின்றன.
 சடங்குகள் மனிதர்களினை ஒழங்குபடுத்துவதற்கும் மனதிலே தெளிவுநிலையினை ஏற்ப்படுத்துவதற்கும் துணைசெய்கின்றன.
சடங்குகள் மனிதர்களது வாழ்வில் மூன்று நிலைகளில் முதன்மை பெறுகின்றன. அதாவது பிறப்பு ,பாரயமடைதல், இறப்பு ஆகிய நிலைகளில் முதன்மை பெறுகின்றன.

எனினும் மனிதர்களது வாழ்வியலோடு தொடர்புடைய வகையில் இச் சடங்கு  முறைகள் செல்வாக்கு செலுத்துகின்ற அதே வேளை ஆண்மிகம் சார்ந்த வகையில் கோயில்களது வழிபாட்டுடன் சடங்குகள் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தன
.
 கோயில்களில் பூசாரிகள் வழிபாடுகளினை மேற்கொள்கின்ற போது மக்கள் பயபக்தியுடன் பங்குபற்றினர். காலப்போக்கில் சடங்கு முறைகள் வழக்கொழிந்து செல்கின்ற போதிலும் சில ஊர்களில் இன்றும் வழக்கொழிந்து போகாமல் கோயில்களில் இடம்பெற்று வருகின்றன
.
 கோயில் சடங்குகள் மக்களது உள விடுதலைக்கான வடிகாலாகவும் அவர்களை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து வாழ்வில் நம்பிக்கை கொள்வதற்கான வழிமுறைகளினை ஏற்ப்படுத்துவதினையும் அடிப்படையாகக்கொண்டு இச்சடங்குகள் விளங்குகின்றன.
சடங்கு நிலைகளில் உருவேறி ஆடுதல் மூலம்     மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே நெருக்கமான ஆண்மீகரீதியிலான தொடர்பு நிலை ஏற்ப்படுத்தப்படவதன் மூலம் மக்கள் தமதுபிரச்சினை களினை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது
.
இப்பின்னனயில் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் நிண்ட காலமாக இச்சடங்க நிகழ்வகள் இடம் பெற்ற வருகின்றன.
 இச்சடங்கு நிகழ்வானது அப்பிரதேச மக்கள் ஒண்று கூடுவதற்கும் அதே வேளை பிற பிரதேசத்தவர்கள் இணைந்து கொள்வதற்குமான வாய்பு உருவாக்கப்படுகின்றது
.
வரலாற்றுச்சிறப்பு மிக்க தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையினைக் கொண்ட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்ற மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா பெரிய தம்பிரான் ஆலய பிரதம பூசகர் பெரியதம்பி பூசகர் தலைமையில்  அண.மையில் இடம்பெற்றது.
 
   பொங்கல் பெருவிழா நிகழ்வினை முன்னிட்டு முதல் நாள் கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்தில் அதிகாலை வேளை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மதியம் விசேட பூசைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாலை வேளை சாடி மனையில் விசேட பூசைகள் இடம்பெற்று பொங்கல் பொருட்கள் ஊர்வலமாக  கே.கே.எஸ். வீதியூடாக மல்லாகம் சந்தியினை அடைந்து நரியிட்டான் ஊடாக பிரதான ஆலயத்தை சென்றடைந்து விசேட பூசைகள் இடம்பெற்றது. மறுநாள்     அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடந்து வழுந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம் பெறும்.

மதியம் விசேட அபிஷேக ஆராதனைகள் பூசைகள் இடம்பெற்று பொங்கல் விழா விசேட பூசைகள் இடம் பெற்று தீமிதித்தல் சடங்கும் இடம் பெற்றது.
தமிழர் தம் பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்குகின்ற சடங்குடன் இணைந்ததான வழிபாட்டு முறையானது இன்றும் இங்க சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன
.
மனிதர்கள் தனிமனிதாகளாக அல்லாமல் சமூக செயல் நிலை உடையவர்களாக உரவாவதற்க இது வாய்ப்பாகின்றது. சடங்கு முறைமையில் பத்ததி முறையிலான சடங்க முறை ஒவ்வொரு சமூகத்தினரும் தமக்குரிய வகையில் சிறப்பாக மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 இச்செயற்பாடு அச்சமூகத்தினரது தனித்துவ செயற்ப்பாட்டிற்கும் சமூகத்தின் பொறி முறைச்செயற்ப்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகின்றது.
பத்ததிச்சடங்குகளும் அவை வெளிப்படுத்துகின்ற முறைகளும் சமூக பண்பாட்டிற்கு ஏற்ப்ப தனித்துவமானவையாக விளங்ககின்றன.
பத்ததிச்சடங்ககள் சமூகத்தில் முதன்மை பெறுவதற்கான காரனமாக நோக்குகின்றபோது உள ஆற்றுப்படுத்தலின் ஓர் அம்சமாக நோக்கலாம் காரணம் கடங்காடி தனது சன்னத நிலையில் பக்தர்களுடன் கடவுளாக தொடர்பு படுகின்ற போது அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கைக்கான ஆற்றுப்படுத்தலாக செயற்ப்படுவதினை சடங்கு நிலைகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 மேலும் சடங்கு நிலைகளின் உடாக மூத்த தலைமுறையினரிடம் இருந்து இளைய தலைமுறையினர் அறிவு பூர்வமான கருத்து நிலைகளினை உள்வாங்கி கொள்வதற்கான பயில் நிலை ரீதியிலான செயல் முறையாக காணப்படுகின்றன
.
இச்சடங்கு நிகழ்வில் முக்கியமானதாக விளங்குகின்ற தீ மிதித்தல் சடங்கானது அம்மக்ளது வாழ்வியல் முறையில் நம்பிக்கையினை கொண்டு வருவதற்கான நிகழவாக காணப்படுகின்றது. தீமிப்பதற்க முன்னர் தீயினை ஆத்துதல் எனும் செயற்பாடு காணப்படுகின்றது. அதாவது தீயினை கட்டுதல் எனக்குறிப்பிடுகின்றனர். தியினை கட்டுதல் எனும் போது சாதரனமாக கட்ட முடியாது சடங்'காடி தனது சன்னத நிலையின் உச்ச நிலையிலேயே கட்ட முடியும் அதன் பின்னர் தான் தீயிலே இறங்கிய பின்னர் பக்தர்களினை தீயிலே இறங்குவதற்கான செயற்ப்பாட்டினை மேற்க்கொள்வார். இம் முறை கூட உள ஆற்றுப்படுத்தலின் அம்சமாகவே றோக்க முடியும். இது நேர்த்pக்கடன் மற்றும் இச்செயற்பாட்டினை மேற்க்கொண்டால நன்மை கிடைக்கும் போன்ற பல விடயங்களினை குறிப்பிடலாம்
.
கலைகளின் பிறப்பியலுக்கு குறிப்பாக அரங்க கலைகளின் பிறப்பியலுக்கு காரனமாக இருந்த சடங்கு நிலைப்பயில்வுகளின் உச்ச நிலையினை இச்சடங்ககளின் ஊடாக தரிசித்து கொள்ள கூடியதாக உள்ளது. அத்தடன் பாரம்பரியங்களின உயிர்ப்பினையும் சமூக கூட்டினைப்பு சார்ந்த செயல்நிலையினையும் இச்சடங்கு வெளிகளின் ஊடாக கண்டு கொள்ள
 முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக