என்னைப் பற்றி

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

மாணிக்கர் இல்லம் முதல்இடம்


           நீண்ட இடைவெளியின் பின் 
                   மாணிக்கர் இல்லம்
             முதல்இடம்


மானிப்பாய் இந்துக்கல்லூரியில் வருடாந்தம் நடத்தப்பட்டு
வருகின்ற நாடகவிழாவில் இல்லங்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டியில்
கந்தையா ஸ்ரீகந்தவேளின் எழுத்துரவாக்கத்தில் எஸ்.ரி.குமரனின்
நெறியாழ்கையில் மாணிக்கர்'இல்ல மாணவர்களது நடிப்பில் உருவான நல்லக
விளக்கு எனும் நாடகம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் சிறந்ந
நடிகர் சிறந்த நடிகை ஆகிய இரு விருதுகளினை பெற்று சாதனை படைத்துள்ளது.
             சுனாமியின் பேரவலத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது  மக்களது
மன உணர்வினை இவ் நாடகம் பேசுகின்றது.
இந்நாடகத்தில் நடிகர்களாக தர்சன், நா.மோகன்ராஜன், குயிலகாந், ஜெயரூபன்,
டில்சான், சாதுசன், சண்ராஜ், சரூஜன், டனிஸ்ரன், ஒலெக்சன், பவன், விதுசன்,
யோகசாந் ஆகியுhரும் பாடகர்களாக கபில்ராஜ் டிலக்சன்  தர்மேந்திரன்
ஆகியோரும் காட்சியமைப்பினை தர்சன்  சண்ராஜ்  டில்சான்
மோகன்ராஜன் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர்.
          குடும்பத்தினை இழந்து பரிதவிக்கின்ற இளம் குடும்பஸ்தர் எனும்
சிவகுரு பாத்திரம் ஏற்று நடித்தமைக்காக டில்ஷான் சிறந்த நடிகராகவும்
குடம்பத்தினை இழந்து பரிதவிக்கும் பெண்னாக நல்லம்மா பாத்திரமேற்று
நடித்தமைக்காக பாவன் சிறந்த நடிகையாகவும் தெரிவு வெய்யப்பட்டனர் நீண்ட
இடைவேளக்கு பின்பு மாணிக்கர் இல்லம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
            
மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் சிவனேஸ்வரன் தலைமையில்
நடைபெற்ற நாடக விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய
மாணவனும் பிரபல சட்டத்தரணியுமான  வி.சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராக
பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் உபதலைவர் கே.பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து
கொண்டனர். நீண்ட கால இடைவேளைக்கு பின்னர் இரவு வேளையில் கல்லூரியின் நாடக
விழா இடம்பெற்றதுடன் இதனை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டதனை அவதாணிக்க
முடிகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக