என்னைப் பற்றி

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு



            தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு




மானிப்பாய் இந்தக்கல்லூரி மாணவன் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் நாடக மண்றத்தினரால் நாடகத்தினை வளர்க்கும் நோக்குடனும் மாணவர்களது நடிப்பு திறனை விருத்தி செய்யும் நோக்கில்  அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட தனிநபர்திறன்கான் தனிநடிப்புப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவன்  குணரத்தினம்  திலக்ஸன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். அதே பிரிவில் தமிழ்செல்வம் டினோஜன் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளர். மேலும் கனிஸ்ர பிரிவுப்போட்டியில் சிவநாதன் சுஜிவ் இரண்டாம் இடத்தினை  பெற்றுக்கொண்டுள்ளர்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில்  நடைபெற்ற தனிநபர் கான் போட்டியில் மகள்மீது பாசம் கொண்ட தந்தையின் மனஉணர்வுகளினை வெளிப்படுத்தியமைக்காக திலக்ஸன் முதலாம் இடத்தினையும் போர்வீரனாக பாத்திரமேற்று  பார்வையாளர்களினை சிரிப்பில் ஆழ்த்திய டினோஜன் இரண்டாம் இடத்தினையும் மத்திய பிரிவில் புரோக்கராக பாத்திர மேற்று நடித்தமைக்காக சுஜிவ் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார். இம் மாணவர்களுக்கான நெறிப்படுத்தலினை கல்லூரியின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டிருந்ததர்.
இவ் வெற்றியின் மூலம் நீண்ட காலத்தின் பின் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தேசியமட்ட நாடகப்போட்டியொன்றில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக