என்னைப் பற்றி

செவ்வாய், டிசம்பர் 24, 2019

(எஸ்.ரி.அருள்குமரன்)


குழந்தைகளை கொண்டாடுவோம்.
சிறுவர்களுடனான ஊடாட்டம் என்பது மகிழ்விற்குரியதாகும்.அவர்களுடன் இணைந்து பயணிக்கின்றபோது எங்களுக்கும் அவர்களுடைய வயது என்கின்ற மனவியல் எழுவது தவிர்க்கவியலாது.
அவர்களது மகிழ்வில் நாமும் இணைகின்றபோது ஏற்படுகின்ற புளகாங்கிதத்திற்கு இணை எதுவும்இல்லை.

சிறுவர்கள் அரங்கச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றபோது அவர்களுக்கு கற்பனை அதிகரிக்கின்றது.
நாம் அவர்களுடன் இணைந்து செயற்படும் போது அவர்களது செயற்பாடுகளில் இருந்து பலவிடயங்களை கற்றுக்கொள்கின்றோம்.
சிறுவர்களிடம் இருந்து வருகின்ற தன்எழுர்ச்சியான உணர்வுகள், அளிக்கை மனோபாவம் என்பன அலாதியானவை.
அவற்றை சரியான முறையில் ஒழுங்குபடுத்துகின்றபோது உன்னதமான ஆற்றுகையினை வெளிக்கொனர முடிவதுடன் ஆளுமையான இளைய தலைமுறையினையும் உருவாக்க முடியும்.
நீண்ட நாள்களிற்கு பின் சிறுவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அரங்க உருவாக்கத்தில் பங்கு கொள்வதற்கும் களம் திறக்கப்பட்டிருந்தது.
இக்களத்திறப்பு நவாலி சென்பீட்டர்ஸ் பாடசாலைஅதிபர் த.ரமேஸ் சேர் மூலம் சாத்தியமாகியது.
இப்பயணம் மகிழ்விற்குரியதாகவும்,பல பட்டறிவுகளை திறந்துவிடுவதற்கான களச்சூழல்களை ஏற்படுத்தியது.
பாடசாலையின் அதிபர் ரமேஷ் சேர் ஒருநாள் அலைபேசியில் அருள் எங்கட ஸ்கூல் பரிசளிப்பு விழாவுக்கு பத்து அல்லது பன்னிரன்டு நிமிசத்துக்கு ஆறு அல்லது ஏழு பேர் நடிக்ககூடிய சின்ன நாடகம் ஒண்டு செய்யவேனும் செய்யலாமா என்டார்.
நாடகம் போடுறது என்டால் ஒருவகை அலாதிப்பிரியாமாக இருக்கிற எனக்கு எப்பிடி மறுப்பேன் உடனடியாம ஓம் சேர் போடலாம் என்டன்.
ஸ்கிறிப்ரை கொண்டு நாளைக்கு ஒரு ரைம் வாங்கோ என்றார்.
நானும் சரி என்பதுடன் அலை பேசி இணைப்பு நிறுத்தப்படுகின்றது.
எதை நாடகம் ஆக்கலாம். எந்த கதை பொருத்தமாக இருக்கும் எனும் சிந்தனையில் இருந்தபோது குரங்கும் தொப்பி வியாபாரியும் கதையை நாடகமாக்கலாம் என சிந்தித்து அதனை பருவரையான சிறு சுவடியாக்கிக்கொண்டு சென்றேன்.
சேரை சந்தித்த பொழுது பொறுப்பான ஆசிரியரை சந்திக்கும் படி வழி காட்டியிருந்தார்.
நானும் பொறுப்பாசிரியரை சந்தித்தேன்.
அவர் மிகவும் ஆர்வமுடையவர் என்பதை உரையாடிய சிறு பொழுதில் அறிந்து கொண்டேன்.
எத்தினை பாத்திரம் சேர் எனக்கேட்டார். நானும் சேருக்கு சொன்னமாதிரி சொன்னன். மிஸ் சிரிச்சுக்கொண்டு நிறைய பிள்ளையள் இருக்கினம் சேர் எண்டார்.
நான் அதுக்கு என்ன ஒரு பிரச்சினையும் இல்லை பாத்திரங்களை கூட்டிவிடுவம் என்டன்.
அவர் பிரச்சினையில்லையா சேர் என்டார்
நான் ஒருபிரச்சினையும் இல்லை என்டன்.
நாடகத்திற்கான சுருக்கமான கதையினையும்,நாடகத்திற்கூடாக சொல்ல வேண்டிய செய்தியினையும் குறிப்பிட்டிருந்தேன்.
அதன் பின்பு நாடகசெயற்பாட்டிற்கான ஒத்திகைக்கு தயாராகினோம்.
எல்லாருக்கும் வணக்கம்.
நாடகம் நடிக்க விருப்பமானவர்கள் கையுயத்துங்கள் என்றதும் அனைவரும் தமது விருப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில குழப்படிசெய்யிறவை முன்னுக்கு வாருங்கள் என்றதும் சில மாணவன்களுடன் மாணவிகளும் ஓடி வந்திருந்தனர்.
குழப்படி காரர் வாங்கோ எனச்சொன்னதுக்கு காரனம்
குழப்படிக்காரர் கிரியேட்டி விற்றியானவர்களாக இருப்பார்கள் என்பது அனுபவம்.
குழப்படி செய்யிறாக்களை சரியான முறையில் வழிகாட்டினால் சரியான பாதையில் பயனித்து பெரிய ஆளுமையானவர்களாக வருவார்கள் என்பது எதார்த்தம்.
மாணவர்கள் கொண்டிருந்த ஆர்வம் காரனமாக ஆறு பாத்திரங்கள் பதிணெட்டாக மாற்றமடைந்தது.
நாடகத்தில் உள்ள பாத்திரங்களை குறிப்பிட்டு விருப்பமான பாத்திரங்களை ஏற்குமாறு வேண்டப்பட்டது.
அதன் பிரகாரம்
பாத்திரங்கள் வழங்கப்பட்டு ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஒத்திகைகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்களிடம் உள்ள திறைமைகளை வெளிக்கொனர்வதற்கு ஏற்றவகையில் சுயவெளிப்பாட்டுடன் பங்குபற்றுவதற்கு களம் திறக்கப்பட்டன.
நெறியாளர் என்பவர் தான் நினைத்ததை மட்டும் அரங்கிலே கொண்டு வருபவர் என்பதை தாண்டி ஆற்றுகையாளர்களது சுயத்திறனை வெளிக்கொனர்வதற்கு களம் கொடுப்பவராக இருக்க வேண்டும்.
அந்தவகையில் ஆற்றுகைரீதியிலான வடிவமைப்பில் அவர்களது இயங்கியல் வெளியினை கருத்தில் கொண்டவகையில் தகவமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொருவரையும் பொருத்தமான வகையில் வழிகாட்டி, அவர்களது நடிப்பு திறன் வெளிக்கொனரப்பட்டது.
அதில் பலரும் சிறப்பாக செயற்பட்டபோதும் குரங்கில் பிரதான பாத்திரம் ஏற்ற மாணவனது செயற்பாடு அபரீதமானதாக இருந்தது.
தினம் தினம் புதிது புதிதாக நடிப்பில் தேர்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்
இந்தவகையில் இவ்வாற்றுகைத்தயாரிப்பில் பங்குபற்றியிருந்தமை மகிழ்வான அனுபவமாக இருந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக