என்னைப் பற்றி

சனி, டிசம்பர் 28, 2019




(எஸ்.ரி.அருள்குமரன்)

காலமாகிவிட்டது  அரங் க ளிக்கை 


யாழ்ப்பான பல்கலைக்கழக நுன்கலைத்துறையும் வெறுவெளி அரங்ககுழுவும்              இ ணைந்து நடத்துகின்ற நாடக விழாவின் ஆரம்ப நாள் நிகழ்வில் ( 04.10.19) கலாநிதி க.ரதிதரன் அவர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற காலமாகிவிட்டது எனும் ஆற்றுகை சிறப்பாக இருந்தது.
இந்நாடகம்
மரணத்துக்கும்_ வாழ்வுக்கும் ,வாழ்வுக்கும்_ ஞாபகங்களுக்கும்,ஞாபகங்களுக்கும்- நியாயங்களுக்கும் இடையிலான போராட்டத்தைப்பற்றி பேசுகின்றது.
இந்நாடகத்தின் நெறியாளர் கலாநிதி க.ரதிதரன் அவர்கள் ஈழத்து அரங்கில் குறிப்பிடத்தக்க நெறியாளார் ஆவார்.
இவரது மலநீக்கம்,பொங்கொலிநகரக்காரர், போன்ற படைப்புக்கள் பேசுபொருள் சார்ந்த வகையில் வித்தியாசயானவையாக காணப்படுகின்றது.
2004.9.0 எனும் ஊம ஆற்றுகைகுறி்ப்பிடத்தக்கது.
இப்பின்னனியில் காலமாகிவிட்டது எனும் நாடகம் எழுத்துரு சார்ந்தவகையில் மாறுபட்டதாகவும் கதை நகர்த்தப்படுகின்ற முறை சிறிய சம்பவங்களின் ஊடாகவும் குறித்த பாத்திரங்களின் ஊடாக சலிப்பற்ற வகையில் கொண்டு செல்லப்படுகின்றமை சிறப்பான விடயமாகும்.
நெறியாழ்கை சார்ந்தவகையில் அசைவியல்,நிலைகள்,பாத்திர ஊடாட்டம் என்பன நவீன நாடக உத்தியின் ஊடே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆற்றுகை சார்ந்த வகையில் நிறைய ஆற்றுகையாளர்களை கொண்டு நெியாழ்கை அழகியல் பூர்வமாக ஆடலன்ன அசைவுகளின் மூலம் ஆரம்ப காட்சி வெளிப்படுத்தப்பட்டமையும்,பொருத்தமான வகையில் பின்னனி இசை,அளவானவகையில் பாடல்கள் கொண்டு வரப்பட்டமையும்,எள்ளல் பாத்திரங்களின் மூலம் சமூகநடப்பியல்களை வெளிப்படுத்தியமை போன்றன சிறப்பானதாக இருந்தது.
ஆற்றுகையாளர்கள் தமது பாத்திரத்தின் ஆத்மார்த்தமான விடயங்களை உள்வாங்கி நடித்திருந்தமை பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
நெறியாளர் ரதிதரன் சேர் மற்றும் ஆற்றுகையாளர்களிற்கும் நல்வாழ்த்துக்கள்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக