வியாழன், ஏப்ரல் 03, 2025
(எஸ்.ரி.அருள்குமரன்)
கலை என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடு. கலைசார்ந்த செயற்ப்பாடுகள் மனிதர்களை புடம் போடுவதற்கும் அவர்களில் இயங்கியலுக்குமான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன.
கலைச்செயற்ப்பாடுகளிற்கான களவெளிகள் தானாக உருவாவதில்லை மாறாக கலைஞர்கள்தமது செயல்தளத்திற்கும் கலைகளினது பெறுமானத்திற்கும் ஏற்றவகையில் கலை வெளிகளினை சிருஸ்டிக்கின்றனர்
கலைகளில் அரங்க கலைகளிற்கான வகிபங்குகள் காத்திரமானவை.
சமூகப்பிரச்சினைகளினை பேசுவதிலும் மக்களுடன் இனைந்தவகையில் நேரிடையாக பகிர்ந்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றன.
நாடகக் கலை தனித்துவமான பண்புகளினை கொண்டதாகும்.மனிதநாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு காத்திரமானதாக விளங்குகின்றது.
மனிதர்கள் தமது உணர்வியலினை பகிர்தலுக்கும் அதனூடான கருத்து பகிர்விற்கும் உறவுகளின் தகவமைப்பிற்கும் இக்கலைகள் பங்காற்றின.
இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் புதிய வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாணத்துடன் வெளிக்கிளம்பின.
இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் அரங்கு என்பது வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று.
அரங்கின் பேசுபொருளில் சமூகத்தின் தேவை நிலை முதன்மையானபங்காற்றுகின்றது என்பது எதார்த்தமாகும். அவற்றினை பதிவுகளாக்க வேண்டும் எனும் தளத்தில் அரங்கவியலாளர்கள் இயங்குகின்றனர்.
சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளினை அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தனர்.
அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை கொண்டுவரமுடியும். என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.
அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின.
சமூகம் காலம்மாற்றமடையும் பேது அம்மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அரங்க வடிவங்களும் தரநிர்ணயம் செய்யப்படுகின்றன. அத்தர நிர்ணயம் என்பது எத்தகையவற்றினை அரங்கிலே பேசமுனைகின்றோமோ அதனை அடிப்படையாகக்கொண்டே அவ்வடிவங்கள் நிர்ணயம் செய்யப்படும்.
நாடகங்களில் எவை முதன்மைப்டுத்தப்படுகி;ன்றனவோ அவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவ்வடிவங்களில் நாடகங்கள் பேசப்படுவதுண்டு.
அரங்க வடிவங்களில் சிறுவர்களிற்கான அரங்குகள் முதன்மை பெற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
இன்றைய சிறுவர்களே எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இளவயதில் பெற்றுக்கொள்கின்ற அறிவோடு இணைந்த அனுபவமே அவர்களது
எதிர்கால வாழ்வியலுக்கான அடித்தளமாகின்றன.
அவ்அடித்தளம் சரியானதாக இடப்படலுக்கு கலைகளது துணைமுதன்மையானதாக விளங்குகின்றது.
அவற்றிலும் இயங்கு கலைகளுடனான ஊடாட்டம் அவர்களது ஆளுமைவெளிப்பாட்டிற்கான களவெளிகளினை சிருஷ்டித்துவிடுகின்றன.
அத்தகைய சுதந்திர வெளிகள் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகளாகின்றன.
சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும்.
சிறுவர்களது மனோதிடம் மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யவேண்டும்.
இவ்வடிவங்களின் ஊடுபொருள்கள் பேசு பொருளின் ஊடாக சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்துவது ஆகும்.
இவ்வகையில் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற துஸ்பிரயோகங்கள்,அவர்களிற்கு இழைக்கப்படுகின்ற கொடுவன்முறைகள், கல்வியெனும் போர்வையில் அடைகின்ற துயரங்கள் என்பவற்றினை காட்சிப்படிமங்களாக புரிதல்களும் வெளிப்படுத்தப்படவேண்டும்.
பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும் வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் உளவியல் சார் அனுகுமுறையுடன் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலும் உருசமைக்கப்படவேண்டும்.
நாடகத்தின் கருப்பொருள் முதன்மையானதாக விளங்குகின்றது. கருப்பொருளானது அவர்களிடம் காவிச்செல்லவுள்ள செய்தியாகும்.இச்செய்தியே அவர்களது மனதில் பதிகைகளாக மாறப்போகின்றன. உளவியல்சார்ந்த அனுகுமுறையுடனும் அவர்களது தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்வதினை அடிப்படையாகக்கொண்டதாகவும். அமையவேண்டும். பெரும்பாலான நாடகங்கள் சிறுவர்களினை கவரக்கூடியவகையில் விலங்குகள்இ பறவைகள் என்பனவற்றினை பாத்திரங்களாக்கி அவர்களுக்குரிய வகையில் விநோதப்பண்புகளினை கொண்டு வெளிப்படுத்தப்படுவதினை அவதாணிக்கலாம். ஆயினும் விலங்குகள் பறவைகள் எனும் பாத்திரங்களினை தாண்டிய வகையிலும் சமூகத்தின் பெரியார்கள் அவர்களது நற்பண்புகளினை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களது சிந்தனைக்கிளறல்களுக்காணவகையிலும் கதைக்கருக்கள் சிருஷ்டிக்கப்படவேண்டும்
ஆற்றுகைகள் எனும் போது குரூரம்இவன்முறை இபழிவாங்கல் போன்ற எண்ணக்கருவினைஉடையதாக காட்சிகள் அமைக்கப்படுவதில்லை காரணம் அவர்களது சிறுவயதில் ஏற்ப்படும் மனவியல்பாதிப்புக்களே அவர்களது நடத்தைகளினை நிர்ணயம்செய்யும் என்பதினாலாகும்.
இத்தகைய சிறுர் அரங்குகளில் சிறுவர்களினை ஈடுபடுத்துவதின் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதினை அவதாணிக்கலாம். அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் இ தலைமைத்துவப்பண்பு இ கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்புக்கள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் இ சுயமுனைப்பு இ போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன.
சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். அத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும்.
அவர்களது கனவுகளினை உருவாக்குவதற்கும் அவர்களது சுய முனைப்பிற்கானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும் இதற்கு சிறுவர் அரங்க செயற்பாடுகள் துணைசெய்யும்.
செவ்வாய், மார்ச் 11, 2025
(எஸ்.ரி.அருள்குமரன்)
அரங்க புரிதல்கள்
அத்தியாயம்1
அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்இஇகற்றுக்கொள்ளலுக்கான களவெளியினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.
இப்பின்னனியில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகவும்இபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் பலம்இபலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர் அநுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும்இ அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த வகையில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது இடங்களில் மீளக்குடியமர்ந்ததன் பின்னர் தமது தொழில் முயற்சிகளில் மீளவும் ஈடுபட முயன்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆற்றுகையொன்றினது நினைவு பின்வருமாறு
காலை வேளை ஆரம்பித்த அரங்க செயற்பாடு சிறுவர்களுடன் கிராமிய விளையாட்டுக்கள் விளையாடுதல்இ அவ் ஊர் மக்கள்இபெரியவர்களுடன் கதைத்தல் இஅக்கதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்களை கண்டுணர்ந்துகொள்ளுதல் என அன்றைய மாலை வரையான பொழுதுகள் நகர்ந்தன.
மாலை வேளை ஆற்றுகைக்கான திட்டவரையான பருவரையுடன் ஆற்றுகை மேற்கொள்வதற்கான நிலையில் எமது பல்கலைக்கழக நண்பர்களுடன் நானும் ஓர் ஆற்றுகையானாக களமிறங்கியிருந்தேன்.
அவ்வேளை மக்கள் மீளவும் பயமற்ற வகையில் கடலுக்கு செல்லவேண்டும்இஅத்தொழில் மூலம் மீளவும் தமது வாழ்வியல் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆற்றுகை தகவமைக்கப்பட்டிருந்தது.
இந்த வகையில் மீனவர்களாக ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை ஆரம்பித்தபோதும். நண்பர் சுதன் குறிப்பிடடார் 'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையினை நகர்த்திச்செல்வோம்' எனக்குறிப்பட்டிருந்தார்.
அந்தவகையில் நான் மீனாக நடித்துக்கொண்டிருக்கின்றவேளை, மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் எனும் வகையில் ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை நகர்த்திச்சென்றனர்.
இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி இமக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனும் செய்தியை ஆற்றுகை எனக்கு உர்த்தியது.
மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிவதாக குறிப்பிட்ட போது தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியவர்கள் கருத்துக்களினை குறிப்பிட்டதுடன்இமீனாக நடித்தவர்களை பிடிப்பது போன்று அவர்களும் செயற்பட்டனர்.
அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னைதலையில் பிடித்து மூன்று முறை மண்ணில் அடித்தார் அவ்வேளை மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகவும். அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.
அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம் மீனை வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை பாவனை செய்து உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்.
இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானதுஇ மகிழ்வளிப்பிற்குரிதுஇ அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில் எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.
இந்தவகையில் அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன் இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.
ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்
ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.
ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இவ்விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அநுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன்.
ஞாயிறு, ஜனவரி 26, 2025
குழந்தை ம.சண்முகலிங்கத்திற்கு தாஸிஸியஸ் அவர்களின் அஞ்சலி
(ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்)
நாடக அரங்கக் கல்லூரி நினைவுகள் அலை அலையாக வர, புரண்டு புரண்டு படுத்தேன். வெம்மூச்சு தவிர, வேறெதுவும் சுரக்கவில்லை.
கொழும்பில் ஒரு தமிழ் நாடகனாக புறக்கணிக்கப்பட்டிருந்த என்னை - யாழ்ப்பாணம் வரவழைத்து,
நாடக அரங்கக் கல்லூரியில் தொண்டாற்ற எனக்கு அந்தப் பெரியவன் வாய்ப்புத் தந்ததால், எத்தனை பென்னம் பெரிய யாழ்ப்பாண நாடக ஆளுமைகளுடன் கூடிப் பழகி உங்கள் அனைவரிடம் இருந்தும் வளம் திரட்டி, ஐரோப்பா வந்த பின் , ஒரு இலங்கை நாடகனாக என்னை நிறுவ முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நாடக முனி குழந்தை சண்முகலிங்கம் என்ற அந்தப் பெரியனுக்கு, நன்றி கூற, இந்தத் தருணத்தில் அங்கு போக முடியவில்லையே என்ற தவிப்பு என்னை இன்னமும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.
அவனிடம் இருந்து நான் பெற்றவை வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவு பிரமாண்டம் பெற்றவை.
ஒரு துரும்பாக ஒதுக்கப்பட்டுக் கிடந்தவனை, ஒரு நாடகத் தூணாக நிமிர்த்தி நிறுத்தியவன் குழந்தை மாஸ்ரர் என்ற அந்த நாடகமுனி.
என்னுடைய ஒப்பாரியை ஒ வென்று குரலெடுத்து வெள்ளப் பெருக்காக்க முடியாமல் எனது லண்டன் குடிலில் இருந்து வெதும்பி விசும்பிக் கொண்டிருக்கிறேன்.
காலையில் எழுந்ததும் கீழே வந்து, சண்ணையும் என்னையும் நாடக ஆத்மாவில் புரிந்து கொண்ட உமது முன்னிலையில் கொட்டித் தீர்க்கிறேன்.
எனது இன்றைய மனத் தவிப்பைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக மண்ணிலும் புலத்திலும் இருக்கும் நாடகர்களிடம் எனது மனத் துயரத் தவிப்பை, அன்ரன், நீரே தெரிவித்துவிடும்
ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்
வெள்ளி, ஜனவரி 24, 2025
கலைமாமணி யமன் மார்க்கண்டு
(எஸ்.ரி.அருள்குமரன்)
கலை வாழ்வு மகிழ்வானது.கலைச்செயற்பாட்டாளர்கள் தமது துயரினை புதைத்து பார்ப்போரை மகிழ்வளிப்பதை நோக்கமாக கொண்டு கலைச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலி.வடக்கு கலைகளுக்கான ஊற்றுக்காலாக விளங்குகின்ற மண். இம்மண்ணில் இருந்து முகிழ்ந்தெழுந்த ஆளுமையான கலைஞர்கள் ஏராளம்.
மரபு வழிக்கலைகளாக குறிப்பிடப்படுகின்ற இசைநாடகத்தின் வளர்ச்சியில் அரும்பணியாற்றிய கலைஞர்கள் காலத்தால் கொண்டாடப்படவேண்டியவர்கள்.
இப்பகைப்புலத்தில் வசாவிளானை பிறப்புத்தளமாக கொண்டு யமன் மார்க்கண்டு என கொண்டாடப்படுகின்ற இசை நாடக கலைஞராக வசாவிளான் வே.மார்க்கண்டு விளங்குகின்றார்.
கலைமாமணி வே.மார்க்கண்டு 1916 ஆம் ஆண்டுபிறந்தார்.இவரது தந்தையார் பெயர் வேலு தயார் பெயர் சீதா. இவர்களுக்கு மகனாக விவசாயச்சூழலினை கொண்ட வசாவிளான்; மண்ணில் பிறந்தார்.
இசை நாடகங்களை பொறுத்தவரையில் ஆண்கள் ஆண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ராஜபாட் எனவும், ஆண்கள் பெண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ஸ்திரிபாட் எனவும் சிறப்பித்து கூறுவார்.
இவற்றை விட வேறு பர்திரங்களில் நடித்து புகழ்பெறுகின்ற போது அப்பாத்திரத்தினை அடை மொழியாகக்கொண்டு அக்கலைஞர்களை அழைப்பதுண்டு.
பபூன் பார்திரத்தில் பெயர் பெற்றவர்நடிகர்கள் பபூன் எனும் சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டனா.
நுடிகர்கள் தாம் பாகமாடுகின்ற பாத்திரத்தினை கனகச்சிதமாக தமது அளிக்கை திறன் மூலம் வெளிப்படுத்துகின்ற போது அப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுவதுண்டு.
இந்தவகையில் பல நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து தமது திறமையினால் பார்வையாhள்களை கவர்ந்திழுத்த வேளையிலும் வே.மார்க்கண்டு ஏற்று நடித்த யமன் பாத்திரம் அவருக்கான அடையாளமாகியது.
அவர்அப் பாத்திரத்தினை ஏற்று நடித்போது அதன் அழத்தினை உணர்ந்து பாத்திரத்தினூடாக வெளிக்கொனர்ந்த உணர்சி வெளிப்பாடு பாத்திரவார்ப்புத்தன்மை, என்பன அவரை யமன் மார்க்கண்டாக தனித்துவப்படுத்தியது.
நடிகமணி வி.வி. வைரமுத்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட வசந்தகான சபாவின் மூத்த உறுப்பினரும், நடிகமணி வி.வி வைரமுத்து ஸ்திரிபாட் (பெண் வேடம் ) இட்டு நடித்த போது ராஜபாட் (ஆண்வேடம்) இட்டு நடித்தவர். குறிப்பாக அரிச்சந்திரமயான காண்டம் நாடகம் ஆரம்ப காலத்தில் மேடையிடப்பட்டபோது நடிகமணி வி.வி.வைரமுத்து சந்திரமதியாக நடித்த போது அரிச்சந்திரனாக நடித்தவர் மார்க்கண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாடகத்தில் லோகிதாசனாக நாவலப்பிட்டி அலுவலக ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தரும் நடிகமணியின் மைத்துனருமான கலாபூசனம் பிள்ளைநாயகம் திருநாவுக்கரசு நடித்திருந்தார்.
சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நடிகமணி வி.வி. வைரமுத்து சத்தியவானாக பாகமாடியபோது யமனாக மார்க்கண்டு பாகமாடியிருந்தார்.
யமனாக மார்க்கண்டு அரங்கி;ல் பிரவேசித்து 'மண்டலமும் விண்டலமும்' எனும் பாடலை பாடியபடி அரங்கிலே ஆற்றுகையாளனாக களமாடுகின்றபோது யமன் எனும் பாத்திரத்தின் பயங்கர உணர்வினை பார்ப்போர் உணரும் படி அவரது நடிப்பு இருக்கும் என நாடகத்தை பார்த்த பார்வையாளர் குறிப்பிடுகின்றனர்.
நாட்டியசாஸ்திரம் பார்வையாளரை சகிர்தயர் எனக்குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தம் சக இருதயம் படைத்தவர்கள் என்பதாகும். அதாவது நடிகன் தான் ஏற்று நடிக்கின்ற பாத்திரத்தின் உணர்வினை பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும்.
இக்கருத்தினை வலுப்படுத்துகின்றதை இசை நாடகவுலகின் ஜம்பவான் நடிகமணி அரிச்சந்திரனாக தோன்றுகின்ற போது அந்நாடகம் ஏற்படுத்துகின்ற அதிர்வலைகளை வார்த்தைகளால் குறிப்பிடமுடியாது பார்த்தவர்களால் மட்டுமே உணாந்து கொள்ள முடியும் என பார்த்து ரசித்த பலரும் குறிப்பிடுவர்.
மார்க்கண்டு யமனாக தோன்றுகின்ற காட்சி பார்வையாளர்களிடையே பயஉணர்வினை ஏற்படுத்தி அவர் ஏற்ற பாhத்திரத்திற்கு வலிமை சேர்த்ததுடன் அவரது நடிப்பினை பார்வையாhள்கள் கொண்டாடுவதற்குரிய களத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இவரது இயல்பான பௌதீகத்தோற்றம் வெள்ளை நிறமேனியாகும். ஆனால் யமனாக தோன்றுகின்றபோது தனது பௌதீகத்தோற்றத்தை ஒப்பனையால் மாற்றி தனது சுய அடையாளத்தை பாத்திரத்திற்குள் புதைத்து அப்பாத்திரமாகவே பார்ப்போர் முன்னிலையில் வெளிப்படுவதே அவரது தனித்துவமானதாக விளங்கியது.
தாளம் இசைநாடகம், நாட்டுக்கூத்து,பரத நாட்டியம், போன்ற கலைவடிவங்களில் முதன்மைபெறுகின்றது. இiசைநாடகத்தினை பொறுத்தவரையில் ஹார்மோனிய இசை பாடல்களிற்கு உயிர்ப்பினை கொடுப்பதை போன்று பாடல்கள் பாடுகின்ற போது தாளம் பிசகாது இருக்கின்றபோது பாடி நடிப்பவர்களுக்கு இடையூறு இல்லாதிருக்கவேண்டும். அந்தவகையில் தாளம் மிக முக்கியமானதாகும்.
பக்க வாத்திய கலைஞர்களுக்கும் மேடையில் பாடி நடிக்கின்ற நடிகர்களுக்கும் ஊக்கம் தருகின்ற கலையாக தாளக்கலை விளங்குகின்றது.
மிகத்திறமையாக மார்கண்டு தாளம் போடுவார்(லயவிந்யாசத்துடன்) இறுதியில் மிருதங்க மேசையில் தாளத்தை தட்டி அறுதியை போட்டு முடிப்பார்.
ஏழுபிள்ளை நல்லதங்காள்,ஞான சௌந்தரி,பவளக்கொடி,அல்லிஅர்ச்சுனா,பூதத்தம்பி,கோவலன் கண்ணகி,சம்பூர்ன அரிச்சந்திரா,பக்த நந்தனார்,வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் நடித்துப்பெயர் பெற்றிருந்தார்.
நாரதாராக , வேதியராக, அட்மிரல் துரையாக என பல பாத்திரங்களிற்கு தனது தனது நடிப்பின் மூலம் உயிர்ப்பினையும் செழுமையினையும் ஏற்படுத்தியிருந்தார்.
பக்த நந்தனாரில் நந்தனாக நடிகமணியும்,வேதியராக மார்க்கண்டும் நடித்திருந்தனர்.சிதம்பர தரிசனம் காணத்துடித்த நந்தனிடம் 'சதம்பர தரிசனமோ' என்ற பாடலை மிகவும் ஆணவத்தோடு நடித்த காலத்தை மறக்கமுடியாது ஜயோ மெத்தக்கடினம் என்று நந்தனாகிய வைரமுத்து பாட்டில் கெஞ்சிக்கேட்பதும் வேதியர் மறுத்து உராத்த குரலில் வசனங்கள் பேசுவதும் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளன. என்கின்றார் வி.வி.வைரமுத்துவின் மகளும் லோகிதாசன் பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவருமான திருமதி ஜெயந்தி தவராசா.
வுசந்தகானசபாவின் வெள்ளிவிழாக்கொண்டாட்டம் கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற போது இவரது சேவையினை கௌரவிக்கின்ற வகையில் கலைமாமணி விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
சக கலைஞர்களை ஒற்றுமைக்குள் வைத்து கலையை வளர்ப்பதில் நடிகமணிக்கு உறுதுணையாக இருந்தார்.
1989 ஆம் ஆண்டு நடிகமணியின் இறுதி நிகழ்ச்சியான சங்கீத கோவலன் நாடகமும் நாடக மேடைப்பாடல் நிகழ்வாக பக்த நந்தனாரும் மேடை நிகழ்வாக இடம்பெற்றபோது அந் நிகழ்விலும் நடித்திருந்தார்.
வசந்தகானா சாபாவின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் நடிகமணி வி.வி.வைரமுத்து மரணிக்கும் வரை சபாவுடனும் வைரமுத்துவுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்..நடிகமணி வி.வி.வைரமுத்து இறந்த பின்;னர் அவரது இழப்பின் துயரினை தாங்க முடியாது தினமும் அவரது இல்லம் சென்று அவரது உறவுகளுடன் தனது துயரினை வெளிப்படுத்தி செல்வராம்.நான் துன்னபப்ட்ட போதெல்லாம் என்னை ஆறுதல் படுத்திய வைரமுத்து இல்லை எனக்குறிப்பிடுவராம். நுடிகமணியை விட வயதில் மூத்தவராக இருந்தபோதும் தம்பி எனும் உறவுடன் தனது பாசத்தை வெளிப்படுத்திய கலைஞராக விளங்கியிருந்தார்.
வசந்த கானசபாவின் பட்டறையில் முகிழ்ந்தெழுந்த கலைஞர்களில் யமன் மார்க்கண்டுவும் ஒருவர். ஆவர் தான் சாhந்த கலையை நேசித்துடன், தன்னை நேசித்த நடிக மணி வி.வி வைரமுத்து,தன்னை தேசம் அறியச்செய்த வசந்த கான சபாவினை அந்திம காலம் வரை நேசித்திருந்தார்.
இவரது இச்செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு பாடங்களாகின்றன.
இவரது இரண்டாவது புதல்வாரன சிறிரங்கநாதன் சங்கீத வித்துவானாகவும்,இளைய புதல்வன் நடாறிந்த வீதி நாடக கலைஞராக வீ.எம். குகராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடகமும் அரங்கியலும் எனும் பாடம் கற்றலுக்குரிய துறையாக பரிமளித்திருக்கின்ற நிலையில் இசை நாடகத்தின் செழுமையிலும் அதன் அறாத்தொடர்ச்சியிலும் வி.வி. வைரமுத்து, யமன் மார்க்ண்டு போன்ற வர்களது பங்களிப்பு காலத்தால் மறக்கமுடியாதவை.
ஆனால் அவர்கள் பற்றிய முழுமையான வரலாற்று பதிவுகளளை கற்றலுக்குரியதாக கொள்ளமை ஏன் என்பது வினாவிற்குரியது.
இவர் பங்குபற்றிய நாடகங்களும் தாங்கிய பாத்திரங்களும் பின்வருமாறு
சத்தியவான் சாவித்திரி- யமன்
அரச்சந்திர மயாணகர்ணடம்- வேதியர்
பக்தநந்தனார் -வேதியர்
சம்பூர்ன அரிச்சந்திரா-விசுவாமித்திரர்
சத்தியவான் சாவித்திரி-நாரதர்
வள்ளி திருமணம்-நாரதர்
இவர் 1994 ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்த போதும் கலைகளை நேசித்து ,கலையினை கொண்டாடி பாதுகாக்கின்ற மனிதர்களது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது ஜயமில்லை.
கட்டுரையாக்கத்திற்கான தகவல் மற்றும் ஒளிப்படங்கள் தந்துதவியவர்
திருமதி ஜெயந்தா தவராசா (வி.வி.வைரமுததுவின் மகள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)