என்னைப் பற்றி

வெள்ளி, மே 30, 2014

                 ஊம ஆற்றுகை  

(எஸ்.ரி.அருள்குமரன்)
நாடகங்கள் பல பரிமானங்களினை உடையவைஆகும். வடிவங்கள் ஒவ்வொன்றும் கால மாறுதல்களிற்கும் கருப்பொருளின் பேசு பொருள்களிற்கும் ஏற்ற வகையில் வடிவங்களினை தர நிர்னயம் செய்வதுடன் புதிய  வடிவங்களாக மீள் பிரசவம் பெறுகின்றன.
அப்பின்னனியில் ஊம நாடக வடிவங்கள் ஒரு காலத்தின் உற்ப்பத்தியாகும். வர்தைகளிற்கான அர்தங்கள் மௌனித்து போகின்ற கனத்தில் பிற வடிவங்களிற்கானதேவைகள் ஏற்ப்படுகின்ற போது நாடகங்கள் இவற்றின்மையங்களினை கொண்டு வெளிப்பட்டன.

நடிகனதுஆற்றுகைத்தளத்தில் உடல்,மனம், குரல் எனும் மூன்று மூலகங்கள் இணைகின்றபோது ஆற்றுகைள் உயிர்ப்பு பெறுகின்றன என்கின்ற போதும் குரல் மொழியின் பயன்பாடு அற்றுப்போகின்ற போதிலும் ஆற்றுகைகள் தாக்கவன்மையானவையாக மிளிர முடியும்  என்பதற்கு சான்றாக  ஊமஆற்றுகைகள்(ஆiஅநீடயலள) விளங்குகின்றன.

உடல் மொழி கொண்டு உணர்வுகளின் இணைப்பின் மூலம் ஆற்றகையின் சாத்தியப்பாட்டினை ஏற்ப்படுத்தக்கூடியனவாக விளங்கும் இவ்வாற்றுகைகள் மொழியின் ஊடாக சொல்ல முடியாது போகின்ற போது அல்லது மொழியின் தேவைப்பாடு ஆற்றுகையில் தேவையற்று போகின்ற போது இவ் உடல் மொழி முதன்மையாக ஆற்றுகையாக பார்வையாளர் மத்தியில் காத்திரமானவகையில் கொண்டு செல்வதற்கு உதவுகின்றன.
 கலைப்படைப்பு என்பதே பார்வையாளர்களிற்கான வகையில் அவர்கள் புரிந்து கொணள்ளக்கூடியமொழியில் அவர்களது உணர்வுத்தளத்திற்கு எற்ற வகையில் வெளிப்படுத்துகின்ற போது தான் ஆற்றுகை தான் வெளிப்படுத்த நினைத்ததினை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
 இப்பின்னனியில் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் மாதந்தோறும் ஆங்கிலத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற    'கருத்தாடல்களம்' (குழசரஅ) என்னும் கருத்துப்பரிமாற்ற நிகழ்வில்  பரிணாம வளர்ச்சியும் அதன் நிறைவும் என்னும் பொருளில்  திருமறைகலாமன்றத்தினரால்  நடத்திய '13.710pஸ்ரீழ' என்ற வார்த்தைகளற்ற நாடகம்   கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப் பட்டது.
நீ.மரியசேவியர் அடிகளின் எண்ணத்தில்  எழுத்துருவாக்கப்பட்டு    பி.எக்ஸ்.கலிஸின்  நெறிப்படுத்தலில் . 'ஊம ஆற்றுகையாக  'கறுப்பு அரங்கின்' நுட்பங்களும் காணொளி நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு நிகழ்த்ப்பட்டன.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் முதல் முடிவுவரையான விஞ்ஞானக்கொள்கையை அடிப்படையாககொண்டு இந்நாடகம் தயாரிக்கப்பட்டது.

இவ் ஆற்றுகைக்கான  நெறியாள்கையினை பி.எக்ஸ்.கலிஸ்  இசையினை ஸ்ராலின் ,வேடஉடை ஒப்பனை அன்று யூலியஸ் ,நடனவாக்கம் சுதர்சினி கரன்சன் எல்.பி.செனவரத்தின  மேற்ப்பார்வை ஒழுங்கமைப்பு மரிய சேவியர் அடிகளார் ஒழுங்கமைப்பு சதீஸ் ஜெகன்  ஒளியமைப்பு துசி ஒலியமைப்பு ஜோசப் ஆகியோர்  மேற்க்கொண்டனர்.

 இவ்வாற்றுகையில் அவிசாவளை , மொனறாகல ,வவுனியா யாழ்ப்பாணம், இளவாலை ,முழங்காவில், கிளிநொச்சி, புத்தளம்  ஆகியி பிரதேசத்தினைச் சேர்ந்த கலைஞர்கள் ஆற்றுகையினை மேற்க்கொண்டனர்.
இவ்வாற்றுகையானது  பூமியினது தோற்றம், இப்பூமிப்பந்தில் உயிரினங்கள் தோற்றம் பெற்றமையும் இவ்உயிரிகளில் முதன்மையான உயிரியாக  மதி;க்கப்படுகின்ற மனிதனது தோற்றம்  அவ் மனிதன் எவ்வாறு பரினாம ரீதியாக வளர்ச்சி பெற்றனாhன் என்பதினையும் அவ்வாறு வளர்ச்சி பெற்றவன் எப்படி தனது ஆற்றல்களினையும் அறிவினையும் பயன்படுத்தி மனிதர்களினை வெற்றி கொண்டு அவர்களினை அடிமைகளாக்கி தனது சுய தேவைகளிற்காக பயன்படுத்திக்கொண்டான் என்பதினையும் அவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்ற போது ஏற்படுகின்ற அழிவுகளும் அதன் பாதிப்புக்குளும் மனித குலத்திற்கு எத்தகைய தாக்கத்தினையும் ஏற்ப்படுத்துகின்றது என்பதினை வரலாற்று ரீதியான அறாத்தொடர்ச்சியுடனும் விஞ்ஞான பூர்வமான அனுகுமுறையுடனும் அழகியல் நேர்த்தியுடன் கலைத்துவ படைப்பாக அளிகை செய்யப்பட்டது.
பரீட்சார்த்த அரங்கு என்கின்ற அரங்க முறையானது 1945களில் மேலைத்தேய அரங்ககளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரங்க முறையாகும். அதாவது மேடை அளிக்கைகளில் நவீனத்துவ ரிதியிலான தொழில்நுட்ட அம்சங்களினையும் இணைந்து ஆற்றுகை செய்வதினை குறிக்கும் அதாவது நாடக அளிக்கையில் பார்வையாளர்களடன் நேரடியாக நடிகர்கள் தோன்றுவார்கள் நடிப்பார்கள் அவர்களுடன் நேரடியாகவே தமது உணர்வுகளினை பகிர்ந்து கொள்வார்கள். மாறாக இப்பரிட்சார்த் முறையிலான அரங்கிலே மேடையில்  தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி காட்சிகள் காண்பிக்ப்படும் அக்காட்சிகளின் ஊடாக நாடகத்திற்கான காட்சிகள் நகர்த்தப்படும் இவ் உத்திகள் பயன்படுத்தப்பட்டமைக்கான காரனமாகநோக்குகின்றபோது அக்காலப்பகுதியில் இரண்டாம் உலக மகாயுத்தம் நிவைடைந்த காலப்பகுதயில் மக்கள்யுத்த காலப்பகுதியில் அநுபவித்த துன்ப துயரங்களினை ஆற்றுகையாக நடிகன் நடித்து காட்டுவதினை விட உண்மையான காட்சிகளினை மக்கள் மத்தியில் காண்பிக்கின்றபோது அவர்களிடையே உணர்வியல் ரீதியிலான பதிவுகள் எற்ப்படுத்தப்படுவதுடன் நாடக காட்சிகளனை இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்பதினாலாகும். இப்பின்னனியில் வலுவான வடிவமான பரீட்சார்த்த அரங்க உத்திகள் காணப்படுகின்றன.

இப்பின்;னனியிலே இவ்வாற்றுகையிலும் பரீட்சார்த்தஅரங்க உத்திகள் ஆரம்பகாட்சிகளான  பிரப்ஞ்சத் தோற்றம் ,உயிரினது தோற்றம் மற்றும் மனிதனது தோற்றம், பரினாம வளர்ச்சி என்பன காணொளியில் காண்பிக்கப்பட்டு மனிதன் நாகரிகம் அடைந்ததன் பின்னரான காட்சிகளுடன் அளிக்கைக்குரியதாக நடிகர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
 ஊம அரங்கின் நடிகனது பிரதான பலம் உடல் மொழியாகும் வார்தையற்ற வகையில் உடல் மொழியினை பயன்படுத்துகின்றபோது உணர்வுரீதியான வகையில் பாத்திரங்களினை சிந்திக்கின்ற வகையிலே அதன் தாக்கவன்மையான பெறுமானம் வெளிப்பட்டு ஆற்றுகை உயிர்ப்புடையதாக மாற்றமடையும்.

இங்கு ஆற்றுகையாளர்கள் இயன்ற வரை வெளிப்படுத்தியபோதிலும் இன்னும் சிறப்பான வகையில்  வெளிப்படுத்துகின்ற போது மேலும் ஆற்றுகை சிறப்பானதாக  உருவாவதற்கான சாத்தியப்படுகள் உள்ளன.
ஆற்றுகையின் பெரும்பாலான நகர்வுகள் நடனக்கோலங்களின் ஊடாகவே நகர்த்திசெல்லப்பட்டன. இவை காட்சிகளில் உள்ள  நடிப்பிற்கான சாத்தியப்பாடுகளினை மட்டுப்படுத்திவிட்டமை போன்ற மனப்பதிவு ஏற்ப்பட்டது. காரனம் ஊம ஆற்றுகைள் வார்தையற்று போகின்ற போதிலும் காட்சிகளிள் ஊடான ஆற்றுகை வெளிப்பாட்டிற்கான வாசல்களினை திறந்து விட வேண்டும.; அப்போது தான் சவால் மிக்க நடிப்பினை ஆற்றுகையாளன் மேற்கொள்ள முடியும் அவ்வாறு மேற்கொள்கின்ற போது தான் ஆற்றுகையின் தரம் உயிர்பானதாக அமையும்.

 சிறப்பான வகையில் நடனக்கோலங்கள் இருந்தன அவை ஆற்றுகையின் போக்கிலே சலிப்பு தன்மையினை எற்ப்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்க மாறாக பெரும்பாலும் நடனத்துடன்  நகர்த்தி செல்லல் என்பது ஆற்றுகையின் குறைபாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஆற்றுகையாளர்களர் தமது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து  ஆற்றுகையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

 பல பிரதேசத்தினை சேர்ந்த ஆற்றுகையாளர்கள் ஒன்றினைந்து இவ்வாற்றுகையில் பாகமாடியிருந்தமைசிறப்பான விடயமாகும். அத்துடன் பலமான விடயமாகவும் காணப்படுகின்றது. காரனம் ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ளவர்களிற்கும் தனித்துவமான உடல் மொழி மற்றும் பாத்திரப்பொருத்தம்  என்பன அவ்வாற்றுகையின் மையத்திற்கு எற்ற வகையில் வெளிப்படுத்த உதவியமை சிறப்பான விடயமாகும்.

இத்தகையவகையிலான வகையில் ஆற்றுகைள் இடம்பெறுவது வரவேற்க்ப்படவேண்டியவிடயமாகும்.
 நன்றி 
ஞாயிறு தினக்குரல் 25.05.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக