என்னைப் பற்றி

சனி, மே 31, 2014

 (எஸ்.ரி.அருள்குமரன்) 

  வாழ்வின் வலிகளினையும் சமூகத்தின் துயர்களினையும் வெளிப்படுத்தியது

நாடகம் மனித வாழ்வின் வலிகளினையும் சமூகத்தின் துயர்களினையும் வெளிப்படுத்துகின்ற கலைவடிவமாக காணப்படுகின்றது.
நாடகம் பல்பரிமானம் உடைய கலையாகும். மனிதர்களது உணர்வுகளினை பதிவுசெய்வதிலும்  மனிதனது வாழ்வியல் வலிகளினை வெளிப்படுத்துவதிலும் அவர்களிடையே  விழிப்புனர்வினை ஏற்ப்படுத்திசெல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனிதநாகரிக வளர்ச்சிக்காலகட்டம் முதல் இக்கலையின்  வகிபங்கு   காத்திரமானதாக காணப்படுகின்றது.
அரங்கு கதையாடல் வெளிகளினை சூழமைப்பதினை அடிப்படையாக்கொண்டு  இயங்கியல் வெளிகளினை தகவமைத்து கொள்கின்றன.
அரங்கின் பேசுபொருளில் சமூகத்தின் தேவை நிலை முதன்மையான்பங்காற்றுகின்றது என்பது எதார்த்தமாகும். அவ் எதார்த்தத்தினை பதிவுகளாக்க வேண்டும் எனும் தளத்தில் அரங்கவியலாளர்கள் இயங்குவதினை அவதாணிக்கலாம்
எவ் விடயத்தினையும் அவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகளினையும் அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தனனர் அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை  கொண்டுவரமுடியம் என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின.
சமூகம் காலம்மாற்றமடையும் பேது  அம்மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அரங்க வடிவங்களும் தரநிர்ணயம் செய்யப்படுகின்றன. அத்தர நிர்ணயம் என்பதுஎத்தகையவற்றினை அரங்கிலே பேசமுனைகின்றோமோ அதனை அடிப்படையாகக்கொண்டே அவ்வடிவங்கள் நிர்ணயம் செய்யப்படும்.
நாடகங்களில் எவை முதன்மைப்டுத்தப்படுகி;ன்றனவோ அவற்றினை அடிப்படையாகக் கொண்டு  அவ்வடிவங்களில் நாடகங்கள் பேசப்படுவதுண்டு.
 இதனடிப்படையில் நாடகப் படைப்பொன்றினை கண்டு ரசிப்பதற்கும் மொழிகளினை தாண்டிய வகையில் உணர்வுகள் காத்திரமான வகிபங்கினi செலுத்துகின்றன.
உணர்வுகளின் ஊடாகவே கனதியான படைப்புக்கள்பிரசவிக்கப்படுகின்றன
 கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசிற பண்டாரநாயக்காவின் நெறியாழ்கையில் உருவான தவல பீஸன நாடகம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நாடகம்இ உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ஜீன் போல் சாத்தரின்இ 'ஆநn றiவாழரவ ளாயனழறள' என்னும் நாடகத்தின் சிங்கள மொழியாக்கமாகும்!
தர்மசிறி பண்டாரநாயக்க நாடக - திரைப்படத் துறைகளில் புகழ்பெற்ற சிங்களக் கலைஞர். அவர் நெறியாள்கைசெய்த 'ஹங்ச விலக்'இ'சுத்திலாகே கதாவ'இ துன்வெனி யாமய'இ 'பவதுக்க'இ 'பவகர்ம' ஆகிய திரைப்படங்கள் முக்கியமானவை. பலங்ஹற்றியோஇ ஹங்ச விலக் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனான அவரது நடிப்பும் மிகச் சிறப்பானது.
இவர்இ திரைப்பட விழாக்களையும் நாடகங்களையும் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்து நடத்தியிருக்கிறார்; அவைஇ சிறந்த கலைப் படைப்புகளை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பினை இங்குள்ள கலை ரசிகர்களுக்கு வாய்ப்பினை  ஏற்ப்படுத்தியது
இந்hடகம் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் தோல்லவியடைந்ததன் பின்னர் ஹிட்லருடைய ஜேர்மன் ஆட்சிக்கு கீழ்பட்டதாக  இருந்த பிரான்ஸில் மார்ஷல் பிரேயின் ஆட்சியைப் பின்னியாகக் கொண்டு 1947 இல் இந்நாடகம் எழுதப்பட்டது. பிரான்ஸ் சுதந்திரமடையச்செய்யும் குறிக்கோளுடன் பிரான்ஸ் நாட்டுப்பற்றாளர்கள் குழுவொன்று பேரேயினுக்கும் ஜேர்மன்களுக்கும் எதிரான ஒரு கொரில்லாப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். ஷோன்போல் சாத்;றே இரண்டாம் உலகப்போர் காலகட்டத்து பிரான்ஸ் நாட்டின் சம்பவங்களையும் நிலைமைகளையும் பயன்படுத்திக் கொண்டே இந்த நாடகத்தை எழுதினார். இந்த நாடகமானது அவருடைய இருப்பியல்வாத தத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இந்நாடகமானது அவருடைய நாடகப்பாணியில்  மிகவும் ஆழமான மனிதநேயத்தன்மையுடைய நாடகப்படைப்பாகும்.
இந்நாடகம் நான்கு காட்சிகளைக் கொண்டதாக உரவாக்கபட்டுள்ளது.  முதலாம் அங்கத்தில் ஹொன்றா கனோறிஸ் ஷோர்வியர் லூஸி மற்றும் லூஸியின்  இளம் சகோதரன் பிறாங்கொயிஸ்  ஒரு கொரில்லா இயக்கத்தின் அங்கத்தவர் என்று கைது செய்யப்படுகின்றார்கள்.  ஒவ்வொருவரும் குற்ற ஒப்புதல் செய்யப்படுகின்றார்கள் இராணுவ வீரர்களினால் விசாரனை செய்யப்படுகின்றார்கள். விசாரனைகள் சித்திரவதைகள் இந்த இயக்கத்தினன் தலைவனை தேடிக்கொள்வதாகவே இருக்கின்றது. தலைவர் ஜோன் கைது செய்யப்படுகின்றான். இவன் விவசாயி போன்ற போர்வையில் உள்ளதன் காரணத்தினால் இராணுவத்தினர் சந்தேகம்  குறைவாகவே கொள்கின்றார்கள்.
பிறாங்கொயிஸ் தன்னுடைய அச்சத்தினை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவருடைய சகோதரியான லூஸி தன்னுடைய குழுவின் தலைவரான ஜோன் இன்னும் உயிரோடு இருக்கின்றார். என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கனோரியஸ் தான் எவ்;வாறு சித்திரவதைகளுக்கு உட்பட்டு தப்பினார் என்பதைக்கூறும் போது லூஸி சித்திரவதையைப்பற்றி பேசவேண்டாம்  என்றும் தலைவரைப்பற்றிய நம்பிக்கையுடன் இருக்கும் படியும் கூறுகின்றார். சித்திரவதைக்கு உள்ளாகும் போது தான் அதனை எதிர்கொள்வதை விட ஒரு துரோகியாகக் கூடும் என்ற அச்சத்தை பிறாங்கொயிஸ் வெளிப்படுத்துகின்றான்.
நித்திரையில் இருந்து எழும்புகின்ற ஹென்றி தன்னை கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஏனைய கைதிகளிடம் இருந்து வினாவுகின்றார். தான் அப்பாவிகளைக் கொன்றதை அவர் கூறுகின்றார். விசாரனைக்கு ஷோபியரைக்கூட்டிக்கொண்டு போகின்றார்கள். ஹென்றி தன்னோடு நடனமாடுவதற்க்கு லூஸியை அழைக்கின்றார். ஷோபியரைச் சித்திரவதைக்குட்படுத்துவதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். லூஸி தன்னுடைய அச்சத்தைப் போக்கிக்கொண்டு தலைவரைப் பற்றிப்பேசுகின்றாள். புதிய கைதியாக அவர்களுடைய தலைவன் ஜோன் கொண்டு வரப்படுகின்றான்.
எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று ஜோன் கூகின்றான்.  தன்னை பிடித்துக்கொண்டு வந்தவர்கள் தன்னை அடையாளம் காணவில்லை என்ற  என்ற காரணத்தினால் அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று ஜோன் கூறுகின்றான். தன்னுடைய அடையாளத்தை மற்றவர்கள் காட்டிக்கொடுக்காத பட்சத்தில் தன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்பதை அவர் கூறுகின்றார்.
ஷோபியரை மீண்டும் கொண்டு வருகின்றார்கள். அவரிடம் ஜோன்  எங்கு என்று விசாரிக்கப்பட்டமையை அவர் ஹென்றியிடம் சுறுகின்றார். அவர் இருக்கும் இடத்தைக் தெரிவித்திருந்தால் நான் துரோகியாயிருந்திருப்பேன் என்று ஷோபியர் கூறுகிறார். ஜோன் அறையில் உள்ளமையை ஷோபியர் புரிந்து கொள்கின்றார். ஷோபியர் காட்டிக்கொடுப்பார் என்ற அச்சத்தை  ஏனைய கைதிகள் வெளிப்படுத்துகின்றார்கள். கணோலிஸை விசாரணைக்கு கொண்டு செல்கின்றார்கள். தன்னால் மற்ற எல்லோரும் துன்புறுத்தப்படுகின்றமை பற்றி ஜோன் கவலைப்படுகின்றார். சித்திரவதைக் உட்படுத்தும்போதுதான்; ஜோனை எவ்வளவு நேசிப்கின்றார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளலாம் என்று லூஸி கூறுகின்றார்
ஒரு சுருட்டைப் புகைத்துக்கொண்டு ஹென்றி தன்னுடைய மரணத்திற்க்கு ஒரு சாட்சியாக இருக்கின்றமை பற்றி சந்தோஷமடைவதாக கூறுகின்றார். தன்னால் பார்க்கக்கிடைக்கும் இறுதி நபராக ஜோன் உள்ளமையைப் பற்றி பெருமையை லூஸி வெளிப்படுத்துகின்றார். ஹென்றியை விசாரனைக்கு கொண்டு செல்கின்றார்கள்.
இரண்டாம் அங்கத்தில் சிறைக்கைதிகளின் செயற்பாடுகள் ஒவ்வொருவருக்கொருவர் வேறு பாடானதாக காணப்படுகின்றது. சித்திரவதை தாங்க முடியாமல் ஷோபியர் யன்னலால் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சிக்கின்றார்.  அவர்களுடைய குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் தங்களுடைய கடந்த கால செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுகின்றார்கள்.
கிளர்ச்சியாளர்களுடைய செயற்பாடுகள் பற்றிய வானொலிச் செய்திகளை செவிமடுத்துக்கொண்டு கைதிகள் தங்களுடைய மிகுதிக்காலம் பற்றிக் கலந்துரையாடுகின்றார்கள்.
விசாரனையின் போது ஹென்றி தான் ஒரு மருத்துவ மாணவன் என்பதனை வெளிப்படுத்துகின்றார். ஜோன் எங்கு இருக்கிறார் என்பதை சொல்லாத பட்சத்தில் பிறாங்கொயிஸ் உட்பட அனைவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் என்று அச்சுறுத்தப்படுகின்றார்கள். ஹென்றி தான் ஒன்றுமே பேசமாட்டேன் என்று கூறுகின்றார். ஹென்றியின் மணிக்கட்டு முறியும் வரை அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஹென்றி ஒன்றும் சொல்லாத காரணத்தினால் மீன்டும் ஷோபியரை விசாரிக்க படைவீரர்கள் முடிவு செய்கின்றார்கள்.
தன்னை ஒரு யூதர் என்பதனை ஏற்றுக்கொள்ளும் படியும் ஷோபியர் வற்புறுத்தப்படுகின்றார். அவர் பேசும் வரை அவருடைய கால்விரல் நகங்களை பிடுங்கி எடுப்பதாக அவருக்கு கூறுகின்றார்கள். ஷோபியர் அதனை நிராகரிக்கின்றார். சித்திரவதைகள் தொடர்கின்றன. லூஸியை விசாரிக்க கட்டளை இடுகின்றார்.
மூன்றாம் அங்கத்தில் சித்திரவதைக்குட்படுத்தும் போது எவராவது ஒலுருவர் தலைவரை யார் என்று வெளிப்படுத்துவார் என்ற அச்சம் கைதிகளிடம் நிலவுகின்றது. சித்திரவதையின் போது லூயிஸ் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஆயினும் அவள் ஒன்றும் வெளிப்படுத்தவில்லை. தங்களுக்குள் மிகவும் பலவீனமானராகிய பிரான்ஸிஸ் சித்திரதையின் போது காட்டிக்கொடுக்கக்கூடும் என்ற பயத்தில் கைதிகளால் கொல்லப்படுகிறார். தான் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு தவறான தகவல்களை வழங்கும் படி ஜோன் கூறுகின்றார். தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்ட காணரணத்தால் ஜோன் தப்பியுள்ளார். தான் திருமணவான் என்பதையும் ஓர் இரவு பிள்ளைப்பிரசவத்தின் போது தன்னுடைய மளைவி இறந்து விட்டால் என்பதையும் ஜோன் கூறுகின்றான். சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஷோபியரின் சடலத்தைப்பற்றி ஜோன் கூறுகின்றான். லூஸியை சித்திவதைக்குட்படுத்தும் போது ஜோன் பதற்றமடைகின்றான்.
படைவீரர்களின் காலடிச்சத்தம் கேட்கும் போது அடுத்தாக தன்னை  விசாரனைக்கு கொண்டு செல்வார் என ஜோன் கூறுகின்றார். அவருடைய அச்சத்தைப்போக்க லூஸி முயற்ச்சிக்கும் போது லூhஸி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை  நன்கு தெரியும்  பிரான்ஸிஸ் கூறகின்றார். அதனை மறுக்கும் லூஸி தான் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க  அவரிடம் வாக்குறுதி வாங்குகின்றார்.
எல்லாம் பிரச்சனைக்கும் ஜோன் தான் காரணம் அவனைக்காட்டிக்கொடுக்கப் போவதாக பிரான்ஸிஸ் சுறுகின்றான் ஜோன் பிரான்ஸிஸ்சை பாதுகாக்க முயற்;சிக்கின்றான்.  ஆனாலும் லூஸி தன்னடைய சகோதரனை எந்த வழியிலாவது மௌனியாக்கவேண்டும் என்கிறாள். லூஸியும் ஹென்றியும் அதற்க்கு உடன்படும் போது  ஜோன் அவர்களிடம் பிரான்சிஸ் இன்னமும் 16 வயதிலுள்ளவன் என்று கூறுகின்றார். ஜோன் வாழவேண்டும் பிரான்ஸிஸ் சாகவேண்டும். என்று அவர்கள் முடிவு செய்கின்றார்கள். பிரான்ஸிஸின் சாவு அத்தியாவசியமானது என்று கனோரியஸ் கூறுகிறார்.
லூஸி தன்னுடைய சகோதரனின் சடலத்துடன் பேசுகிறார். தான் லூசியைக் காதலிப்பதாக ஜோன் கூறுகின்றார். தான் ஜோனைக் காதலித்தாகவும் ஆனாலும் அது பிரான்ஸிஸை கொலை செய்ய உத்தரவு கொடுக்க முன்பு என்றும் லூஸி கூறுகின்றார். தான் தனியாக சாகத் தயாராகிக்கொண்டு இருப்பதாக லூஸி கூறுகின்றாள்.
ஜோனை விசாரனைக்கு கொண்டு போகின்றார்கள். தன்னடைய அப்பாவின் சகோதரனின் உடலில் இன்னமும் உயிர் உள்ளது என்று லூஸி கூறுகின்றார். தன்னுடைய சகோதரன் ஒரு வீரன் என்றும் ஏனையவர்களும் ஷோபியர் போல பலமாக இருக்க வேண்டும் என்பதையும் கூறுகின்றார்.
நான்காவது அங்கத்திலே வாழவேண்டுமா அல்லது சாகவேண்டுமா என்ற நிலையில் கைதிகள் உள்ளார்கள். வாழவேண்டும் என்ற ஆசை மேலோங்கி வருகின்றது. தலைவாரின் ஆலோசனைகளின் படி அவர்கள் தப்பிக்கும் எதிர்பார்ப்புடன் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள்.
காட்டுக்குள்போய் தலைவனான ஜோனை பிடிக்கவேண்டும்  என்று படைவீரர்கள் கூறுகின்றார்கள்  இதற்காக பிரான்ஸிஸ் விசாரனைக்காக அழைத்து வரும்படி கூறும் போது பிரான்சிஸ் ஏனைய கைதிகளால் கொல்ப்படுகின்றமை தெரியவருகின்றது.  ஏன் பிரான்ஸிஸ் கொல்லப்பட்டதாக விசாரிக்கிறார்கள் தாங்கள் எல்லோரும் சேர்ந்து  அதனை செய்தாக கனேரியஸ் கூறுகின்றார்.
வாழ்வதற்கான விருப்பையற்றவர்களான தாங்கள் இப்போது வெற்றியாளர்கள் என்று லூஸி கூறுகின்றார். சூரியன் உதிக்கும் போது எல்லோருமே சாகக்கூடும் என்று லூஸி கூறுகின்றார்.  தான் வாழவேண்டும் என்று அவள் புரிந்து கொள்கின்றாள்.
சிறைக்கைதிகள் வெளியில் கொண்டு போகின்றார்கள் எவ்வாறெனினும் துப்பாக்கிச்சூட்டடுச் சத்தங்கள் அவர்கள் கொல்லப்பட்டமையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் நாடக ஆற்றகை நிறைவு பெறுகின்றது.
இரண்டு மணி நேரம் மொழிப்பரிதல்களினை தாண்டி உணர்வப்புரிதலின் ஊடாக இவ்வாற்றுகை நகர்திச்செல்லப்ட்டன.
நடிப்பு என்பது நடிகனின் மொழி.   மொழி   எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்கின்றது.    நடிப்பு அவ்வாறு பகிர்வதோடு  மட்டுமல்லாது  ஆழ்ந்த அனுபவத்திற்குப் பிறரை அழைத்து செல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பது.
  நடிகனின் மொழியின்மீது அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையின் அடிப்படையில் மட்டுமல்லஇ அறிவுக்குப் பொருத்தமான காரண காரியத்தின் அடிப்படையில் நின்றும் சொல்கிறோம்... நடிப்பு ஓர் ஆதிகலை! மூத்தகுடி பேசிய முதல்மொழி நமது நடிகனின் மொழி. உடல்மொழி!
இவ்வகையில் நடிகன் பேசுகின்ற மொழி காத்திரமானதாக வரகின்ற வேளையிலே தான் படைப்பும் காத்திரமானதாக  அமையும் அந்தவகையில்  நடிகர்களது நடிப்பு வெளிப்பாடு சிறப்பானதாக பார்வையாளர்களினை கவரும் வகையில்  இருந்தது.
நாடகத்தின் இதர மூலகங்களினது இணைவும் அதன்பயன்பாடும் ஆற்றுகையின் வெற்றிக்கு அடிப்படையாயின.
ஆற்றகையின் நிறைவில் கருத்து பகிரும் போது பலரும் எமது வாழ்வி;ன் வலிகளினை பார்க்கக்கூடியதாக இருந்ததாக  குறிப்பிட்டனர்.
எல்லாவற்றிக்கம் மேலாக கலைத்துவமான ஆந்றுகையினை பார்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டது எனக்குறிப்பிடலாம்

   நன்றி யாழ்.தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக