என்னைப் பற்றி

சனி, மே 31, 2014


              தவக்கால ஆற்றுகை

 (எஸ்.ரி.அருள்குமரன்)

நாடகம் சமூகத்தின் இனைப்பிற்கான அடிப்படைப்புள்ளி. உணர்வுகளின் வெளிப்பாடுகளில் இருந்து உற்ப்பத்தியாக்கப்படுகின்றது. அவ்வுனர்வுக்கிளர்ச்சி தான் படைப்பின் உயிர்ப்பினை நிர்ணயம் செய்கின்றது.
கலை என்பது மனித உணர்களின் வெளிப்பாடு என பொதுமையாக கருத்துபகிர்கின்றனர்.
கலைகளில் முதன்மையான கலையாக நாடகக்கலையினை குறிப்பிடும் ஆய்வாளர்கள் சமூகத்தினை ஊடு வெளியாகக்கொண்டு    சமூகத்தினை வெளிப்படுத்துகின்ற கலையாகவும் குறிப்பிடுவர்

 கால வெளியில் காலத்திற்கு காலம் புதிய கலைவடிவங்கள் வெளிக்கிளம்புகின்றபோதும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் எல்லோரையும் ஆக்கிரரமித்துள்ள சூழ்நிலையிலும் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக்கொண்டு கலைகள் படைக்கப்படுகின்ற போதும் மனிதர்களுடன் நேரடியாக உறவாடி அவர்களது மன இறுக்கங்களினை போக்குகின்ற கலைவடிவம் எனும் வகையில் நாடகக்கலைக்கென தனித்துவம் உண்டென்பது மறுக்கவியலாக உண்மை. இதற்கு சான்றாக நல்ல நாடககலைப்படைப்பிற்கு கூடுகின்ற மக்களது எண்ணிக்கையினை கொண்டு மதிப்பிட்டு கொள்ள முடிகின்றது.

நாடகக்கலை காலம் தோறும் பல்வேறு சமூக தேவைகளினை நிவர்த்திசெய்து கொள்வதில் முனைப்பு காட்டியமையினை வரலாற்று வெளிகளின் ஊடாககண்டு கொள்ள முடியும்.
பிரச்சார ஊடகமாகவும் மக்களது பிரச்சினையினை வெளிப்படுத்துவதாகவும் மக்களிடையே நற்பண்புகளினை வளர்த்துக்கொள்வதற்கானதாகவும், பக்தியினை ஊட்டுவதற்காகவும் என பல தளங்களில்      செயற்ப்பட்டன.

அப்பின்னனியில் கிறிஸ்தவ மக்களது வாழ்வியல் புலத்தில் அவர்களது வாழ்கையில் நம்பிக்கையில் ஊடு கலந்த செயற்பாடக மதரீதியாக நோக்கு நிலையில் முதன்மைனதாகவும் புனிதமானதாகவும் நோக்கப்படுகின்ற செயற்பாடக விளங்ககின் தவக்காலத்தில் இப்புனித செயற்பாட்டினை பறை சாற்றுவதாக தவக்கால ஆற்றுகை விளங்குகின்றது.

தவக்காலம் எனும் பேது யேசுக்கிறிஸ்துவினது வாழ்வில் இடம்பெற்ற முக்கிமான காலப்பகுதியாக கொள்ளப்படுகின்றது.
மானிட விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கி  துன்பச்சிலுவை சுமந்து மரித்து,உயிர்த்தெழுந்த    மகானது வாழ்வினை பேசுவதுடன் அவ்வாழ்வினை மீட்டுப்;பார்பதுடன் அவர் தனது வாழ்வில் கடைப்பிடித்த நல்ல விடயங்களினை மக்கள் பின்பற்றுகின்ற போது ஏற்ப்படும் நன்மைக்ள பற்றிய கதையாடல்கள் இக்காலப்பகுதயில் முதன்மைப்பத்தப்படுவதுடன் புனிதப்படுத்தப்பட்ட வகையில் மக்கள் இணைத்துகொள்வதற்கான வகையில் கலைச்செயற்ப்படுகளில் மதநிறவனங்கள் முனைப்புக்காட்டுவதினை காலவோட்டத்தினூடாக அவதானிக்காலம்.

மத்திய காலத்தில் திருச்சபைகள் பஸ்கா எனப்படுகின்ற நாடகசெயற்பப்hட்டினை மேற்கொண்டன எனும் செய்தியினை அறியக்கூடியதாக உள்ளது.

அப்பின்னயில் ஈழத்தரங்கினை பொறுத்தவரையில் பல சமூக செயற்ப்பாட்டு விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றவகையில் இறையியல் செயற்ப்பாட்டிற்கு முதன்மை கொடுக்கும் வகையில் நாடக செயற்ப்பாட்டினை திருமறைக்கால மன்றம் எனும் அரங்க நிறுவனம் றீண்ட காலமாகமாக மேற்கொண்டு வருகின்றது.

நீ.மாரிய சேவியர் அடிகளின் எண்ணத்தில் உதித்த இவ்வரங்க நிறுவனம் நீண்ட தனது பயனத்தில் யுத்த சூழ்நிலையிலும் கூட இக்கலைப்பணியினை மேற்கொண்டு வருவதுடன் பல நாடக செயற்ப்பாடுகளினை மேற்கொண்டு வருவதினை அவதானிக்ககூடியதாக உள்ளது.

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் சடங்காகவும் ,கலை ஆற்றகையாகவும் காணப்படும் 'திருப்பாடுகளின் காட்சி' பாஸ்கு நாடகம் எனும் பெயருடன் நீண்ட காலமாக பத்தியுடன் நிகழ்த்ப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஆரம்பகாலத்தில் மரப்பொம்மைகளைக்கொண்டு நிகழ்த்ப்படும் உடக்குபாஸ்க்மரபாக காணப்பட்டு ஐம்பதுகளிற்குபின் மனிதர்கள் நடிக்கின்ற நாடகமரபாக  மாற்றமடைந்து.
 ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் றிகழ்த்தப்பட்ட வடிவம் பின்னர் தமிழ்,சிங்கள சுதேச வடிவங்களிலும் நிகழ்துகின்ற கலை வடிவமாக
 வளர்ச்சியடைந்தது.

1963ம் ஆண்டு அருள்திருகலாநிதி நீ.மரியசேவியர் அடிகள் மன்னாரில் தமிழிலே திருப்பாடுகளின் நாடகமொன்றினை எழுதி மேடையேற்றினார்.
அன்றிலிருந்து இன்றுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்பணி அவரினால் தொடரப்படுகின்றது.
.
இப்பணியினை தொடர்வதற்காவே திருமறைக்கலாமன்றம் எனும் அரங்க நிறுவனத்தினை  1965ல் உருவாக்கிஅதற்கூடாக பிரமாண்டமான நாடகபாரம்பரியமாக இதனை கட்டியெழுப்பியுள்ளார்.
நீ.மரியசேவியஅடிகளார் தமிழ் மரபுக்குரியதாகபாடுகளின் வரலாற்றிக்கு பல்வேறு கோணங்களினை வழங்கும் வகையில் 25 ற்கு  மேற்ப்பட்ட பல்Nறு நாடகபிரதிகளினை எழுதி ஆயிரக்கணக்கான அரங்ககளில் அவை அரங்கேற வழிகோலினார்.

அதுமட்டுமன்றி இம்மரபிற்குரியதான பெருங்காட்சி மரபு இசைமரபு போன்றவற்றினையும் உருவாக்கிஅவற்றிக்கு உச்சகலைப்பெறுமானத்தினையும் ஏற்ப்படுத்தியது மட்டுமல்லாது சமகால வாழ்வியிலின் தேவைக்குரிய செய்தியை சொல்லும் படைப்பாகவும் வளர்த்தெடுத்தார்.
இவ்வளர்ச்சி நீட்சிபெற்று இலங்கையின் பல பாகங்களிலும் புலம் பெயர் தேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1971ம் ஆண்டு அன்பில் மலர்ந்த அமரகாவியம் எனும் ஆற்றுகை  கோட்டையின் பெருமதிலை பின்னனியாக கொண்டு பிரமண்டமான ஆற்றுகையாக மேற்கொள்ளப்பட்டது.

1973ல் இலங்கையில் இருந்து இந்தியவிற்கு கொண்டு செல்லப்பட்ட திருச்சி தேவர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்தாக களங்கம் எனும் ஆற்றுகை விளங்குகின்றது.

1982ல் ஈழத்தில் முதல்வீடியோ திரைப்படமக வெளிப்புற காட்சிகளுடன் பலிக்களம்எனும் ஆற்றுகை தயாரிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 1990முதல் மேடையிடப்பட்ட முக்கியமான படைப்புக்களாக 1990ல் 'களங்கம';1991ல் 'சிலுவைஉலா'1992ல்'கல்வாரிப்பரனி'1993ல்பலிக்களம்'1994ல் கல்வாரிக்கலம்பகம்1995ல் அன்பில்மலர்ந்த அமரகாவியம் 1996ல் கல்வாரிச்சுவடுகள் 1997ல் பலிக்களம் 1998ல் சிலுவைச்சுவடுகள் 1999ல் கருதிகழுவியகவலயம் 2000ல் பலிக்களம் 2001ல் காவியநாயகன் 2002ல் கல்வரியாகம் 2003ல் பலிக்களம் 2004ல் காவியநாயகன் 2005ல் குருதிகழுவிய குவலயம் 2006ல் பலிக்களம் 2007ல் மலையில்விழந்த துளிகள் 2008ல் காவியநாயகன் 2009ல் கல்வாரியாகம் 2010ல் வெள்ளியில் ஞாயிறு 2011ல் கடவுள்வடித்தகண்ணீர் 20012ல் வேள்வித்திருமகன் 2013ல் காவியநாயகன் போன்றவற்றினை குறிப்பிடலாம்.



இத்தொடர்ச்சியில் இவ்வாண்டு யாழ்.திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கிய  மாபெரும் அரங்க ஆற்றுகையாக 'வேள்வித் திருமகன'; எனும் திருப்பாடுகளின் காட்சி கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை   திருமறைக்கலாமன்ற அரங்கில் இடம்பெற்றது.

இந்நாடகத்திற்கான நெறியாழ்கையினைதிருமதி வைதேகசெல்மர்எமில், எழுத்துரவாக்கம் ஆலோசனை வழிநடத்தல் அருள்திரு நீ.மரியசேவியர் அடிகளார் மேற்கொண்டுள்ளார்.

பெருவிழா அரங்கு எனும் வகுதிக்கள் உட்படுத்தக்4டியவகையில் மிகப்பிரமாண்டமானவகையிலும் மிகபெரியளவில் கூடிய ஆற்றுகையாளர்களினை கொண்டமைந்தவகையில் காத்திரமானகவைப்டைப்பாக முகிழ்ந்தெழுந்தது.

 அரங்கில் இருநூறிற்க்கும் மேற்ப்பட்ட ஆற்றுகையாளர்கள் செயற்ப்பட்டதுடன்   நூற்றிக்கும் மேற்ப்பட்ட துனைக்கலைஞர்களின் கூட்டினைப்பின் பங்களிப்புடன் இவ்வாற்றுகை தயரிக்கப்பட்டிருந்தது.
 
ஒவ்வொருவருடமும் நிகழ்த்ப்படுகி;ன்ற போதிலும் ஒவ்வொருவருடமும் வித்தியசாமான கோணத்தில் கதைநகர்வினை மேற்க்கொண்டிருந்தனர்.
கதை பழையதாகவிருந்தபோதிலும் பேசப்பட்டமுறையும் பேசுமுறையம் புதியனவாகவும் மதம்சார்ந்தவிழுமியங்களினை கலைத்துவநேர்த்தியுடன் வெளிக்கொனரப்பட்டது.

ஆற்றுகை தரம் நவீனத்துவ சிந்தனையுடனும் சமகாலப்போக்குடனும் பயனிக்ககூடியவகையில்   காணபப்பட்டது.

நாடகம் ஆரம்பிக்கும்போதே மேலெழுகின்ற உணர்வெழுச்ச்சியுடனனானவகையிலான பாடல்களும் அப்பாடல்களின் ஊடாக   குறியீடுசார்ந்தவகையிலான நடனக்கோலங்களும் அவற்றிக்க ஊடான காட்சிப்புரிதல்களுக்கூடான வகையில் கதையினை நாகர்த்திச்சென்ற முறை சிறப்பானதாக இருந்தது.

படைப்பென்பதே பார்வையாளன் பார்க்கின்றபோது அவனை நகர்திச்செல்வதாகவும் படைப்பு முடிவடைகின்ற வரையில் சலிப்பற்ற முறையில் இருப்பதே நல்ல படைப்பாக கொள்ளமுடியும் அதற்க்கு அரங்கில் பணியாற்றுகின்ற ஆற்றுகையாளன் உட்பட துணைக்கலைஞர்களின் பணி காத்திரமானதாக காணப்படவேண்டும்.இவ்வகையில் அரங்காடிகள் மற்றும் துனைக்கலைகளின் பங்க காத்திரனமாகதமாக இருந்தது.

 வேடஉடை வடிவபை;பு வித்தியாசமானதாகவும் பாடைப்பிற்கான செய்தியனை சொல்வனவாகவும் காணப்பட்துடன் இசையானது படைப்பினை இயல்பான வகையில் நகர்த்திச்செல்வதற்கும் பார்ப்போருடன் ஒன்றிப்பதற்குமானவகையில் காத்திரமனதாக இருந்தது.

கலையியலின் ஊடாக இறையியலினை பார்க்கின்ற போக்காக இந்நாடகங்கள் இடம்பெற்றமையினை  அவதானிக்க கூடியதாக உள்ளது.

 நன்றி யாழ்.தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக