என்னைப் பற்றி

சனி, மே 31, 2014

 ( எஸ்.ரி.அருள்குமரன்) 

    நீண்டு செல்லும் பிரபஞ்ச வெளியில் மனிதர்கள் பிறப்பதும் மரணிப்பதும் இயல்பான செயல்நிலைகள் மாறாக அவர்களில் காலத்தினை விஞ்சி மரணத்தின்பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சானையாளர்கள்.அப்பகைப்புலத்தில் கலைஞர்கள் சமூகத்தின் இயங்கியல் வெளியில் தம்மை இணைந்து அவர்களின் மகிழ்வே தம் மகிழ்வாக வாழ்வியிலினை வரித்துக்கொண்டு தமது கலைச்செயற்ப்பாடுகளினை மேற்கொள்கின்றனர். அவர்கள் இறந்த பின்னரும் அப்படைப்பக்களின் ஊடாகவும்  தமது காத்திரமான கலைச்செயற்பப்hடுகள் மூலமாகவும் எம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்
ஈழம்தனக்கான ஆளுமையாளர்களினை காலம் தோறும் பிரசவித்துக்கொண்டிருக்கின்றது அத்தகைய பிரசவிப்பே 'அண்ணை றைட்' என்ற அடைமொழியின் ஊடாக அனைவராலும் அழைக்கபட்ட கே.எஸ்.பாலச்சந்திரன்
நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது குனச்சித்திர நடிப்பிலும் சிறந்துவிளங்கியவர் கே.எஸ் பாலச்சந்திரன்.
 ஈழத்தின் நாடக>திரைப்படக் கலைஞர் >எழுத்தாளர் இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடியவர் என பல  துறை ஆளுமையாளரான இவர் 1944ம் ஆண்டு ஜூலை மாதம்  10ம்திகதி கரவெட்டியில் பிறந்து பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

 அண்னை றைட் என்ற நாடகத்தில் மூலம் பிரபல்யமான இவர் 1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணை றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.

அத்துடன் தணியாத தாகம் என்ற வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். 
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம்>திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி> நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய 'புரோக்கர் பொன்னம்பலம்' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக> நவீன> நகைச்சுவை> பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். 

 வாடைக்காற்று> நாடு போற்ற வாழ்க> ஷார்மிளாவின் இதய ராகம்> அவள் ஒரு ஜீவநதி>  டீடநனெiபௌ (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும்  கனடாவில் உயிரே உயிரே  தமிழிச்சி கனவுகள் மென்மையான வைரங்கள் சகா என் கண் முன்னாலே1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும் தனி நாடகங்களையும் தொடர் நாடகங்களையும் எழுதியவர்.
'மனமே மனமே' என்ற தொடர் நாடகத்தை எழுதி இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். கனவுகளும் தீவுகளும்> தலைமுறைகள் >குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய் காரோட்டம் கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுத இயக்கிமேடையேற்றியுள்ளார்

இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவிலுள்ள ரிவிஐ தொலைக்காட்சிக்காகவும் இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருந்தார். அவற்றில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இவர் ஒளிபரப்பிய 'றுழனெநசகரட லு.வு.டுiபெயஅ ளூழற'  இவரது படைப்பு எம்மிடையே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி யாகும்.  'நாதன்>நீதன்  நேதன்' என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி  நெறிப்படுத்தி ஒளிபரப்புச் செய்தார்.
இலங்கையில் வாடைக்காற்று  டீடநனெiபௌ (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில்  மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர்.  இவர்  தாகம்  வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது)  உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

 இப்பகைப்பலுத்தில் ஈழத்து கலைத்துறைப்பயனத்தில் பயனித்து தனக்காகவகையில் தனித்துவங்களினை உருவாக்கிமக்கள் மனங்களினை வென்ற கலைஞன் மரனத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பான்என்பதில் ஜயமில்லை.

 நன்றி யாழ்.தினக்குரல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக